பிரபல சினிமா தியேட்டர் இன்று மீண்டும் திறக்கப்படுவதுடன், டிக்கட் விலையில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கொரொனா வைரஸ் உலகம் முழுவதும் ஏற்படுத்திய அச்சுறுத்தலில் பல தொழில்கள் முடங்கி போகின. இதில் சினிமாத்துறை மற்றும் திரையரங்க வியாபாரமும் அடங்கும். இதனால் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து மூடப்பட்ட சினிமா தியேட்டர்கள், இப்போது கொஞ்சம் கொஞ்சமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மீண்டும் இயங்க தொடங்கியிருக்கின்றன.
இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள பிரபல தியேட்டர் நிறுவனமான ஏ.எம்.சி ஒரு மகிழ்ச்சியான விஷயத்தை அறிவித்துள்ளது. 100 வருட பாரம்பர்யம் கொண்ட இந்த தியேட்டர், மார்ச் மாதம் மூடப்பட்ட பிறகு, இன்று மீண்டும் திறக்கப்படுகிறதாம். அதுமட்டுமின்றி, இந்த 100 வருடத்தை கொண்டாடும் வகையில், 1920-ல் ரூபாய் 15 சென்ட்டுக்கு விற்கப்பட்ட விலைதான் தற்போதுள்ள டிக்கட்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து இந்தியாவிலும் எப்போது இந்த கட்டுப்பாடுகள் தளர்த்துப்பட்டு, தியேட்டர்கள் திறக்கப்படும் என ரசிகர்கள் ஆவலோடு உள்ளனர்.
In just over 12 hours, we re-open the doors of #AMCTheatres for the first time since 3/17. And we're celebrating 100 years in operation with 1920 prices- just 15¢ all day. Welcome back to the movies. Welcome back to AMC. pic.twitter.com/41jEYhkXgw
— AMC Theatres (@AMCTheatres) August 20, 2020