Fakir Others Banner USA

டிவி நடிகை மர்ம மரணம் - காரணம் தெரியாமல் குழப்பத்தில் டாக்டர்ஸ் டீம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல டிவி நடிகை Butsaran Thongchio மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் மருத்துவர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

Famous Thai TV series actress Butsaran Thongchio, dies due to mysterious illness

தாய் திரைப்படங்கள், மியூசிக் வீடியோக்கள், டிவி சீரிஸ்களில் நடித்துள்ள Butsaran Thongchio-க்கு புகைப்பிடிப்பது, குடிப்பழக்கம் என எவ்வித கெட்ட பழக்கமும் இல்லாமல் ஆரோக்கியமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் இரவில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, அவரது மூக்கு மற்றும் வாயில் இருந்து ரத்தம் கசிந்துள்ளது.

இதையடுத்து, அவரது இதயத்துடிப்பு திடிரென நின்றுபோனதால், அவர் உடனடியாக பாங்காக்கில் உள்ள ஸ்ரீராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி Butsaran Thongchio உயிரிழந்தார். மருத்துவர்கள் குழுவின் தீவிர கண்காணிப்பில் இருந்த போதிலும், நடிகைக்கு எதனால் ரத்தம் கசிந்தது என்பதை மருத்துவர்களால் கண்டறிய முடியவில்லை.

நடிகை Butsaran Thongchio-ன் மரணம் தொடர்பாக மருத்துவர்கள் குழு அளித்த செய்தியாளர் சந்திப்பில், ‘Butsaran Thongchio-க்கு மூளை வீக்கம் ஏற்பட்டதனால், மண்டைக்குள் ரத்த அழுத்தம் திடீரென குறைந்து, அவரது சுவாசக் குழாய் பாதிக்கப்பட்டது’ என கூறியுள்ளனர்.

Butsaran Thongchio-ன் மரணத்துக்கான காரணம், அதிக ரத்த கசிவு, சுவாசக் குழாய் பாதிப்பு என கண்டறியப்பட்டாலும், ஆரோக்கியமாக இருந்த நடிகைக்கு திடீரென இப்படி ஒரு பிரச்சனை ஏற்பட்டது ஏன் என்பது குறித்து மருத்துவர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

Famous Thai TV series actress Butsaran Thongchio, dies due to mysterious illness

People looking for online information on Butsaran Thongchio, Mysterious illness, Thailand Actress will find this news story useful.