புகழ்பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாக கொண்டு, அதே பெயரில் "பொன்னியின் செல்வன்" (Ponniyin Selvan) படத்தை இரண்டு பாகங்களாக இயக்குனர் மணிரத்னம் (Mani Ratnam) இயக்குகிறார். சமீபத்தில் படத்தின் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தின் முதல் பாகம் அடுத்த வருடம் திரைக்கு வர இருக்கிறது.
லைகா புரொடக்ஷன்ஸ் (Lyca Productions) மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் (Madras Talkies) நிறுவனங்கள் இணைந்து "பொன்னியின் செல்வன்" படத்தை தயாரிக்கின்றன.முழு வீச்சில் நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பல நகரங்களில் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் பல கட்ட படப்பிடிப்புகள் பாண்டிச்சேரி, ஐத்ராபாத் நகரங்களில் முடிந்த பின், படக்குழு மத்திய பிரதேசம் சென்றது. அங்கு சில நாட்களுக்கு முன் ஆர்ச்சா, குவாலியர்,மகேஸ்வர் நகரில் படப்பிடிப்பு தொடங்கி நிறைவடைந்தது. பின்னர் இந்த படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தமிழ்நாட்டில் உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி பகுதிகளில் தொடங்கி உள்ளது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன் இந்த படத்தில் தான் பங்குபெறும் காட்சிகளை நடித்து முடித்து விட்டதாக நடிகர் ஜெயம் ரவி அறிவித்தார். இதனைத்தொடர்ந்து நடிகர் கார்த்தியும் தான் பங்குபெறும் காட்சிகளை நடித்து முடித்துவிட்டதாக நடிகை த்ரிஷா மற்றும் ஜெயம் ரவியை குறிப்பிட்டு "இளவரசி @trishtrashers நீங்கள் இட்ட ஆணை நிறைவேற்றப்பட்டது. இளவரசேசசசசச @actor_jayamravi என் பணியும் முடிந்தது!" என டிவிட்டரில் அறிவித்துள்ளார்.
இளவரசி @trishtrashers, நீங்கள் இட்ட ஆணை நிறைவேற்றப்பட்டது.
இளவரசேசசசசச @actor_jayamravi, என் பணியும் முடிந்தது! #PS #PonniyinSelvan
— Actor Karthi (@Karthi_Offl) September 16, 2021
இந்த படத்தின் எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் கவனித்து வருகிறார், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிகிறார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான் ஆகியோர் நடிக்கிறார்கள்.