பிரபல இசையமைப்பாளர் தனது குழந்தை பிறந்த தகவலை ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.
மலையாள சினிமாவில் இளம் இசையமைப்பாளராக கலக்கி வருபவர் கைலாஸ் மேனன். இவர் விளம்பர படங்களுக்கு இசையமைத்து பிரபலமானார். இதை தொடர்ந்து இவர் டொவினோ தாமஸ் நடித்த தீவண்டி படத்துக்கு இசையமைத்து மேலும் ரசிகர்களை கவர்ந்தார். இத்திரைப்படத்துக்கு இவர் ஃபிலிம்ஃபேர் விருதையும் வென்றார்.
இந்நிலையில் தற்போது கைலாஸ் மேனன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு மகிழ்ச்சியான தகவலை தெரிவித்துள்ளார். தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ள விஷயத்தை,, க்யூட் போட்டோவுடன் பகிர்ந்துள்ள அவர், குழந்தைக்கு சமான்யு ருத்ரா என பெயரிட்டுள்ளார். தனது மனைவி தீவிரமான சிவன் பக்தர் என்பதால், சிவனை குறிக்கும் இந்த பெயரை வைத்திருக்கிறாராம் இவர். இதையடுத்து இசையமைப்பாளரின் பதிவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.