பஹத் பாசில் அபர்ணா பாலமுரளி இணைந்து நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது.
Also Read | பொன்னியின் செல்வன் படத்தின் FDFS.. ரசிகர்கள் மத்தியில் குடும்பத்துடன் படம் பார்த்த ஜெயம் ரவி!
கேஜிஎப் படத்தை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகர் பஹத் பாசில் புதிய படத்தில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிகை அபர்ணா பாலமுரளி நடிக்கிறார்.
கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களை தயாரித்த இந்த விஜய் கிரகன்டூரின் ஹோம்பலே நிறுவனம் தற்போது பிரபாஸ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கும் 'சலார்' படத்தைத் தயாரித்து வருகின்றனர். மேலும் பிரித்விராஜ் நடிக்கும் டைசன் படத்தையும் தயாரிக்கின்றனர். மேலும் சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு புதிய படத்தையும் தயாரிக்கின்றனர்.
இந்த பஹத் பாசில் படத்தை இயக்குனர் பவன் குமார் இயக்குகிறார். இவர் லூசியா & யூ டர்ன் படங்களின் மூலம் கன்னட சினிமாவை இந்திய அளவில் பிரபலமாக்கிய இளம் இயக்குனர் ஆவார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் துவங்கி கோடை விடுமுறைக்கு திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு தூமம் என பெயரிடப்பட்டுள்ளது. நிக்கோட்டின் வேதியியல் கூறு அடிப்படையில் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. தமிழ், மலையாளம், கன்னடம் மொழிகளில் இந்த படம் வெளியாக உள்ளது.
Extremely excited about this❤️ https://t.co/xdt0eCFPLs
— Aparna Balamurali (@Aparnabala2) September 30, 2022
Also Read | வேற லெவல் லுக்கில் ஶ்ரீ ராமனாக பிரபாஸ்.. 'ஆதி புருஷ்' படத்தின் முதல் லுக் போஸ்டர்!