குக் வித் கோமாளி மற்றும் பல குறும்படங்களின் மூலம் நம்மிடையே பிரபலமானவர் அஸ்வின்.
அண்மையில் குக் வித் கோமாளி ரியாலிட்டி நிகழ்ச்சிக்காக மோஸ்ட் பாப்புலர் ஆடவருக்கான விருதினை Behindwoods Gold Icons - டிஜிட்டல் மற்றும் டெலிவிஷன் விருது விழாவில் பெற்றார்.
இந்நிலையில் சந்தோஷ் தயாநிதி இசையில், குட்டி பட்டாஸ் என்கிற மியூசிக் வீடியோ ஆல்பத்திலும் நடித்துள்ளார். இதனிடையே Behindwoods சேனலில் அஸ்வின் அளித்துள்ள பேட்டியில் சில அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
அதில், “நெகடிவிட்டியை நிறைய பார்த்து பயந்து ஓரமாக போய் உட்கார்ந்திருக்கிறேன். ஆனால் அடுத்தவங்க என்ன பத்தி நினைப்பாங்க, என்ன பேசுவாங்க என்பதை உறவினர்களிடம் முதலில் சந்திச்சேன். ஆனால் அதையெல்லாம் தாண்டி அவங்கள விட சிறப்பாக நான் போகிறேன், நான் என் மனதுக்கு பிடித்த வேலையை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என தாமதமாக உணர்ந்தேன்.
நான் ஸ்கூல் படிக்கும்போது எஸ்.டி.ஆரின் (சிம்பு) பெரிய ரசிகன். அப்போது வல்லவன் பட பாடல்கள் வெளியாகின. என் ஹாஸ்டலில் போன், மியூசிக் கேட்பதற்கான கேட்ஜெட்களுக்கு எல்லாம் அனுமதி இல்லை. ஆனாலும் ஒரு வாக்மேனை எப்படியோ பெற்றுவிட்டேன். இரவு 1 மணிக்கு நடுராத்திரியில் பேய் மாதிரி எழுந்து கிரவுண்டில் சென்று போய் கேட்டுவிட்டு வந்தேன். அந்த அளவுக்கு எஸ்.டி.ஆரின் தீவிரமான ரசிகன் நான். அதை அவரிடம் அவர் ரியலைஸ் பண்ணுமாறு ஓர் நாள் சொல்ல வேண்டும் என நினைக்கிறேன்.” என அஸ்வின் குறிப்பிட்டுள்ளார்.