www.garudavega.com
iTechUS

வடிவேலு தாயாரின் இறுதிச்சடங்கில்.. அஞ்சலி செலுத்திய மு.க. அழகிரி.. உருக்கமான வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் வைகைப்புயல் வடிவேலுவின் தாயார் இறப்பிற்கு முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி அஞ்சலி செலுத்தினார்.

Ex minister Mk azhagiri Attending vadivelu Mother funeral

Also Read | "H. வினோத், விஜய் சார்க்கு இரண்டு கதை வச்சுருக்கார்".. மனோபாலா பகிர்ந்த EXCLUSIVE தகவல்! வீடியோ

நடிகர் வடிவேலுவின் தாயார்  உடல் நலக்குறைவு காரணமாக நேற்றிரவு மரணமடைந்தார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருக்கு வயது 87. மதுரை மாவட்டம் விரகணூரில் உள்ள வடிவேலு வீட்டில் இன்று மாலை இறுதிச் சடங்கு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

தனியார் மருத்துவமனையில் சளி தொந்தரவு காரணமாக   சிகிச்சை பெற்றுவந்த தனது தாயார்  பொங்கல் வரையிலும் ஆரோக்கியமாகவே இருந்ததாக வடிவேலு தெரிவித்திருக்கிறார் வடிவேலு. தமிழக முதல்வர் ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பூச்சி முருகன் உள்ளிட்டோர் போன் மூலம் தொடர்புகொண்டு ஆறுதல் கூறியதாகவும் வடிவேலு தெரிவித்திருக்கிறார்.

Ex minister Mk azhagiri Attending vadivelu Mother funeral

நடிகர் வடிவேலு அவர்களின் தாயார்  மறைவையொட்டி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

நடிகர் வடிவேலு அவர்களின் அன்புத்தாயார்  மதுரை விரகனூரில் உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன். ஆளாக்கி அழகு பார்த்த அன்னையின் மறைவு என்பது எந்த ஒரு மகனுக்கும் ஈடுசெய்ய இயலாதஇழப்பாகும். 'வைகைப் புயல்' திரு. வடிவேலு அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். என தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Ex minister Mk azhagiri Attending vadivelu Mother funeral

இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி, வடிவேலு வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி உள்ளார். அவருடன் மதுரை முன்னாள் துணை மேயர் மன்னன் உடன் சென்றுள்ளார். அழகிரியின் காலில் விழுந்து வணங்கிய வடிவேலு, தனது தாயாரின் உடல் வைக்கப்பட்டிருந்த அறைக்கு அழகிரியை அழைத்துச் சென்றார். அங்கு அழகிரி & அவரது ஆதரவாளர்கள் வடிவேலுவின் தாயாருக்கு அஞ்சலி செலுத்தினர்.

Also Read | Vadivelu : பெரும் சோகம்.! நடிகர் வடிவேலு தாயார் உடல்நலக் குறைவால் மரணம்..!!

வடிவேலு தாயாரின் இறுதிச்சடங்கில்.. அஞ்சலி செலுத்திய மு.க. அழகிரி.. உருக்கமான வீடியோ வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Ex minister Mk azhagiri Attending vadivelu Mother funeral

People looking for online information on Ex minister Mk azhagiri, Vadivelu, Vadivelu Mother funeral will find this news story useful.