90ஸ் கிட்ஸ்களின் எவர்கிரீன் பேவரைட் சீரியல்களான கோலங்கள் மற்றும் தென்றல் ஆகியவை மறு ஒளிபரப்பு செய்யப்பட உள்ளன.
Also Read | அடுத்த லெவலுக்கு சென்ற விஷாலின் ‘லத்தி’…. மாஸ் போஸ்டருடன் வெளியான Update!
கோலங்கள் மேஜிக்…
தொலைக்காட்சிகளின் வருகைக்குப் பிறகு சீரியல்கள் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வருகின்றன. குறிப்பாக பெண்களுக்கு தொலைக்காட்சி சீரியல்கள் மிகவும் விருப்பமான ஒன்றாக இருப்பதால், பெரும்பாலான சீரியல்களில் பெண்க்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவர்களுக்கு மையக் கதாபாத்திரம் கொடுத்து உருவாக்கப்படுகின்றன. அந்த வகையில் தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்ற சீரியல்களாக 90-களின் காலகட்டத்தில் வெளிவந்த நிறைய சீரியல்களை குறிப்பிடலாம். அதில் முக்கியமான இடத்தை தேவயானி உள்ளிட்ட பலர் நடித்த ‘கோலங்கள்’ மெஹா தொடர் பிடித்தது.
கோலங்கள் சாதனை…
தேவயானி, தீபா வெங்கட், அபிலாஷ், சத்யபிரியா, அஜய் கபூர் மற்றும் திருச்செல்வம் உள்ளிட்ட பலர் நடித்த இந்த தொடரை முக்கிய வேடத்தில் நடித்திருந்த திருச்செல்வமே இயக்கி இருந்தார். கோலங்கள் சன் டி வியில் 2003 ஆம் ஆண்டு 2009 ஆம் ஆண்டு வரை 6 ஆண்டுகாலம் ஒளிபரப்பாகி சாதனை படைத்தது. மொத்தம் 1553 எபிசோட்கள் ஒளிபரப்பாகி சாதனை படைத்த இந்த சீரியல் இன்றளவும் பேசப்படும் ஒரு சீரியலாக அமைந்தது.சன் டிவி யில் ப்ரைம் டைம்மில் இந்த சீரியல் வெளியாகி ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது. இந்த சீரியலின் டைட்டில் பாடலுக்கு பிரபல இசையமைப்பாளர் டி இமான் இசையமைத்திருந்தார்.
மீண்டும் கோலங்கள் …
90ஸ் கிட்ஸ்களின் நாஸ்டால்ஜியா சீரியல்களில் ஒன்றாக இருந்த கோலங்கள் தொடர் நிறைவுற்று 13 ஆண்டுகள் கழித்து தற்போது மறு ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. மே 16 ஆம் தேதி முதல் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமில்லாமல் மற்றொரு ஹிட் சீரியலான தென்றல் சீரியலும் நாளை முதல் திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இது சம்மந்தமான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு கோலங்கள் மற்றும் தென்றல் சீரியல் ரசிகர்களுக்கு டபுள் டிரீட்டாக அமைந்துள்ளன.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8