மணிரத்னத்தின் 'அலைபாயுதே' படத்தில் சிறு வேடத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமானவர் கார்த்திக் குமார். இவர் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் இயக்கிய 'வானம் வசப்படும்' படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து 'கண்ட நாள் முதல்', 'யாரடி நீ மோகினி', 'வெப்பம்', 'பசங்க 2' போன்ற கவனிக்கத்தக்க வேடங்களில் நடித்து வந்தார். பின்னர் ஸ்டேன்ட்-அப் காமெடியனாக Evam என்ற பெயரில் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார்.
இந்நிலையில் இவர் தற்போது இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். இந்த படத்தில் பாக்யராஜ், பாண்டியராஜன், ஊர்வசி மற்றும் 2 குழந்தைகள் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடிக்கின்றனராம். முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகவுள்ள இந்த படத்தன் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் துவங்கப்படவிருக்கிறது.