சின்னத்திரை நடிகை காயத்ரி கிருஷ்ணன் நம்முடைய சேனலுக்கு பிரத்யேக நேர்காணல் ஒன்றை அளித்திருக்கிறார். இதில், தன்னுடைய வாழ்க்கை பற்றியும் நடிப்பு குறித்தும் பல்வேறு தகவல்களை பகிர்ந்திருக்கிறார்.
எதிர்நீச்சல்
சன் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று 'எதிர்நீச்சல்'. நடிகை தேவயானி நடிப்பில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற 'கோலங்கள்' மெகாத்தொடரை இயக்கிய இயக்குனர் திருச்செல்வம் தான் இந்த 'எதிர்நீச்சல்' தொடரையும் தற்போது இயக்கி வருகிறார்.
இந்த தொடரில் நடிகர் மாரிமுத்து, கனிகா, பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா, மதுமிதா, சத்ய பிரியா, பாம்பே ஞானம், காயத்ரி கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். திங்கள் முதல் சனி வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகும் மெகாதொடரான எதிர் நீச்சல், ஜனனி, குணசேகரன், சக்தி, கதிர், நந்தினி, ஈஸ்வரி, ரேணுகா, ஞானசேகரன், ஜான்சி ராணி எனும் கதாப்பாத்திரங்களுக்கு இடையேயான கதையாக அமைந்துள்ளது. ஆணாதிக்கம், பெண் உரிமை ஆகியவற்றை மையக் கருவாக கொண்டு இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் ஜான்சி ராணி எனும் கதாப்பாத்திரத்தில் நடித்துவரும் காயத்ரி கிருஷ்ணன் மற்றும் நடிகர் மாரிமுத்து ஆகியோர் மகளிர் தின வாழ்த்துக்கள் தெரிவிக்கும் ரீல்ஸ் வைரலானது குறிப்பிடத்தக்கது.
போன் நம்பர் விவகாரம்
இந்த நிலையில் தற்போது பிஹைண்டவுட்ஸ் தளத்துக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ள நடிகை காயத்ரி நடிகர் மாரிமுத்து குறித்து பேசி உள்ளார். அதன்படி அண்மையில் ட்விட்டரில் வந்த ஒரு புகைப்படத்தின் கீழ் நடிகர் மாரிமுத்து தம்முடைய போன் நம்பரை கொடுத்தது பற்றி நடிகை காயத்ரியிடம் கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த அவர் "போன் நம்பரை கொடுப்பதும் கொடுக்காததும் அவர் விருப்பம். அவருடைய நோக்கம் என்ன என்று ஜட்ஜ்மெண்ட் பண்ண முடியாது. அது அவருடைய பர்சனல். ஆனால் அதன்பிறகு சூட்டிங் ஸ்பாட்டிலும் சரி, அவர் அது பற்றி விஷயங்களை கண்டு கொள்ளவில்லை. அவர் தன்னியல்பாகவே இருந்தார். எப்போதும் போல ஜாலியாக அனைவரிடமும் பேசி சிரித்து கொண்டிருந்தார். மற்றவர்கள் தான் அதை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர் அதைப் பற்றி எல்லாம் கண்டுகொள்ளவே இல்லை" என தெரிவித்தார்.