நடிகர் சூர்யா நடிப்பில், (10.03.2021) அன்று திரையரங்குகளில் வெளியாகிய திரைப்படம் 'எதற்கும் துணிந்தவன்'.
RRR படத்தை தொடர்ந்து பீஸ்ட் படத்தின் உரிமத்தை கைப்பற்றிய பிரபல வினியோகஸ்தர்! இது வேற லெவல்
இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த சூர்யாவின் 40வது திரைப்படம் இது. சூர்யா நடிப்பில் சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு, இந்த திரைப்படம் தியேட்டரில் வெளியாகியது.
இதற்கு முன்பு அவரின் நடிப்பில் வெளியாகியிருந்த 'சூரரைப் போற்று' மற்றும் 'ஜெய்பீம்' ஆகிய இரண்டு திரைப்படங்களும், ஓடிடி தளத்தில் வெளியாகியிருந்தது. கடைசியாக 'காப்பான்' திரைப்படம் தான், கடந்த 2019 ஆம் ஆண்டில், திரையரங்குகளில் வெளியாகியிருந்தது.
CBFC சென்சாரில் U/A சான்றிதழ் பெற்ற இந்த படம் 150:38 (2:30:38) மணி நிமிடங்கள் ஓடுகிறது. பெற்றோர்களின் மேற்பார்வையில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களும் இந்த படத்தை பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 5 மொழிகளில் ஒரே நாளில் PAN INDIA படமாக ET வெளியாகியது.
இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவாளர் ரத்னவேலு ISC ஒளிப்பதிவு செய்கிறார் இவர் சூர்யா நடித்த 'நந்தா', 'வாரணம் ஆயிரம்' போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். நடிகர் சத்யராஜ், புகழ், சூரி, பஞ்சு சுப்பு, வினய் முக்கிய வேடத்தில் இந்த படத்தில் நடித்தனர்.
இந்நிலையில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் நெட்பிளிக்ஸில் வரும் ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்ட உள்ளது. இதை நெட்ப்ளிக்ஸ் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
விஜய்யின் பீஸ்ட்.. வெளிநாட்டில் ஒரு நாள் முன்பே ரிலீசா? உண்மை என்ன? முழு தகவல்!