வாரிசு படத்தில் ஆடியோ வெளியீட்டு விழா குறித்த தகவல் வெளியான நாள் முதல் நடிகர் விஜயின் பேச்சு எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் உச்சகட்ட ஆவலில் இருந்து வந்தனர். அப்படி ஒரு அப்படி ஒரு சூழலில் நேரு உள்ள விளையாட்டு அரங்கில் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது.
வாரிசு படத்தில் நடிகர் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா முதல் முறையாக இணைந்து நடித்துள்ளார். இவர்களுடன் பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, குஷ்பு, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா எனப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர். கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.
வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா, 24.12.2022-ல் நடைபெறுகிறது. நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த இந்த நிகழ்வில், விஜய், ராஷ்மிகா மந்தனா , எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர், வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜூ, இயக்குநர் வம்சி பைடிபள்ளி, இசையமைப்பாளர் தமன், ஷங்கர் மகாதேவன், டிரம்ஸ் சிவமணி, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், பிரகாஷ் ராஜ், சரத்குமார், நடிகர் ஷாம் மற்றும் பலர் கலந்துகொண்டுள்ளனர்.
இந்நிகழ்வில், ஏகோபித்த ஆதரவை ரசிகர்கள் அளித்து வந்த சூழலில் கடைசியாக நடிகர் விஜய்யும் பேசுவதற்காக மேடை ஏறி இருந்தார். பொதுவாக நடிகர் விஜய், “என் நெஞ்சில் குடியிருக்கும்” என தனது பேச்சை ஆரம்பிப்பார். ஆனால் தற்போது வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில், “என்னை உருவாக்கிய ரசிகர்களுக்கு நன்றி” என்ற வார்த்தையை குறிப்பிட்டுள்ளார். இந்த விஷயம் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'வாரிசு' திரைப்படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.