கடந்த ஜூன் 14 ஆம் தேதி, நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் திடீர் மறைவுச் செய்தி ஒட்டுமொத்த திரை உலகினர் மற்றும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சுஷாந்த் சிங் மும்பையில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த வழக்கை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் திரைத் துறையைச் சேர்ந்த பிரபலங்கள் மற்றும் நடிகர்கள் தங்கள் இரங்கலை சமூக ஊடகத் தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். பல நட்சத்திரங்கள் சுஷாந்துடனான நினைவுகளை சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளனர். நடிகர் பிரகாஷ் ராஜ் தற்போது உணர்ச்சிமயமான ஒரு பதிவை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில் சுஷாந்த் சிங் ராஜ்புத் திரைத்துறையில் நேபாடிஸம் (nepotism) பற்றி பேசும் வீடியோவை பிரகாஷ் ராஜ் பகிர்ந்துள்ளார். அதில் அவர் 'நானும் கூட இதனால் பாதிப்படைந்துள்ளேன். அதைக் கடந்து விட்டேன் ... ஆனால் என் காயங்கள் மிக மிக ஆழமானவை ..இன்னும் அந்த வடுக்கள் என்னிலிருந்து அகலவில்லை, ஆனால் இந்த இளைய நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தால் அதை தாங்க இயலவில்லை ..இனியாவது நாம் கற்றுக் கொள்வோம் .. உண்மையிலேயே இதை எதிர்த்து எழுந்து நிற்போம் இனி ஒருபோதும் கனவுகளை மடிய விடக் கூடாது .. ’ என்று பதிவிட்டுள்ளார்
#nepotism I have lived through this .. I have survived ... my wounds are deeper than my flesh ..but this child #SushanthSinghRajput couldn’t.. will WE learn .. will WE really stand up and not let such dreams die .. #justasking pic.twitter.com/Q0ZInSBK6q
— Prakash Raj (@prakashraaj) June 15, 2020