நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படம் நேற்று முன்தினம் (11.01.2023) வெளியாகி உள்ளது.
Also Read | இந்த வாரம் பிரபல OTT- களில் ரிலீஸாகும் முக்கிய திரைப்படங்கள் & வெப் சீரிஸ்.. முழு தகவல்!
தளபதி விஜய்யின் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிபள்ளி 'வாரிசு' படத்தை இயக்கியுள்ளார்.
நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, கணேஷ் வெங்கட்ராமன் எனப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசையமைப்பாளர் எஸ் தமன் இசையமைத்துள்ளார். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்துள்ளார். கே எல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.
தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவான இந்த படம் தெலுங்கில் நாளை ஜனவரி மாதம் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் வெளியான தமிழ் பதிப்பு வாரிசு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நேற்று முன்தினம் அதிகாலை 4 மணி முதல் வாரிசு திரைப்படம் திரையிடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வாரிசு படத்தின் எடிட்டர் பிரவீன் கே எல் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேகமான பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் வாரிசு படத்தின் நீளம் குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார். பிரவீன் கே எல் கூறியதாவது, "பெரிய படங்களுக்கு எப்பொழுதும் நீளம் அதிகமாக தான் வரும். வாரிசு படத்தினை பொறுத்தவரை முதல் கட் 4 மணி நேரத்திற்கு அதிகமாக இருந்தது. இது இயல்பான ஒன்று தான். எடிட்டரின் வேலையே இந்த நேரத்தை சுருக்குவது தான்." என பிரவீன் கூறியுள்ளார்.
Also Read | தளபதி விஜய்யின் தெறி டான்ஸ்.. வெளியான Celebration of Varisu வீடியோ!