www.garudavega.com

"3 மாசம் இருக்கு.. இப்பவே இப்படியா?”.. சென்னை நிலநடுக்கத்தை உணர்ந்த டிவி நடிகைகளின் பதிவு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னையில் இருந்து வடகிழக்கில் 320 கி.மீ தொலையில் வங்கக்கடலில் 10 கி.மீ ஆழத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

earthquake 2021 aug chennai tv actress reacts சென்னை நிலநடுக்கம்

நில அதிர்வு கண்காணிப்பு மையம் இதனை உறுதி செய்துள்ளதாக தகவல்கள் வெளியானதை அடுத்து, அனைவரும் இதை பற்றி பேசத் தொடங்கியுள்ளனர்.

அதன்படி அடையாறு, பெசன்ட் நகர், ஆழ்வார்பேட்டை, திருவான்மியூர், அண்ணாநகர் உள்ளிட்ட சென்னையின் சில பகுதிகளில் 5.1 ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாயுள்ள நிலநடுக்கத்தால் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக சிலர் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் குக் வித் கோமாளி மணிமேகலை “உங்களுக்கும் நிலநடுக்கம் ஃபீல் ஆச்சா?” என்றும், பாண்டியன் ஸ்டோர்ஸில் மீனா கேரக்டரில் நடிக்கும் ஹேமா, “எனக்கு நிலநடுக்கத்தை உணர்ந்தேன்.. நீங்க யாராச்சும் உணர்ந்தீர்களா?” என்றும் சமூக வலைப்பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

இதேபோல், பாக்கியலட்சுமி சீரியலில் இனியா கேரக்டரில் நடிக்கும் நேஹா, “டிசம்பருக்கு இன்னும் 3 மாசம் இருக்கு.. ஆனா இப்பவே அந்த எஃபெக்ட் தெரியுதே” என்பதாக என தமது சமூக வலைப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

வங்கக்கடலின் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் சென்னைக்கு பெரும் சேதம் ஏதும் வராமல் தப்பியது என்றாலும், சென்னை நகருக்கு அருகில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது என்பது திடீர் பீதியை கிளப்பியுள்ளது.

Also Read: அதிர்ச்சியில் ரசிகர்கள்!!.. "Show-ல இருந்து விலகுறத தவிர வேற வழியே இல்ல!".. நடிகையின் Viral பதிவு!!

"3 மாசம் இருக்கு.. இப்பவே இப்படியா?”.. சென்னை நிலநடுக்கத்தை உணர்ந்த டிவி நடிகைகளின் பதிவு! வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Earthquake 2021 aug chennai tv actress reacts சென்னை நிலநடுக்கம்

People looking for online information on Mani Megalai, Neha, Trending, TVActress, TVSerial, TVShow, VijayTelevision will find this news story useful.