பிரபல நடிகர் துல்கர் சல்மான் தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்திருக்கிறார். அப்போது ரசிகர் ஒருவர் சீதா ராமம் படத்தின் இரண்டாம் பாகத்தை எதிர்பார்க்கலாமா? என கேட்டிருந்தார். இதற்கு துல்கர் அளித்த பதில் பலரையும் புன்னகைக்க செய்திருக்கிறது.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | 14 வருடங்களுக்கு பிறகு விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா.. தளபதி 67 படக்குழு வெளியிட்ட தெறி வீடியோ!
மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திரமாக திகழ்பவர் மம்முட்டி. இவருடைய மகனும் நடிகருமான துல்கர் சல்மான் கடந்த 2012 ஆம் ஆண்டு 'செகண்ட் ஷோ' படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து பல படங்களில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழில் வாயை மூடி பேசவும், மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ஓகே கண்மணி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ஆகிய படங்களில் துல்கரின் கதாப்பாத்திரம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன.
Images are subject to © copyright to their respective owners.
அண்மையில் இவர் நடித்து வெளிவந்த சீதா ராமம் படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. தெலுங்கின் முன்னணி இயக்குநரான ஹனு ராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான 'சீதா ராமம்' படத்தில் துல்கருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை மிருணாள் தாகூர் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார். கடந்த ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
Images are subject to © copyright to their respective owners.
இந்நிலையில், நடிகர் துல்கர் சல்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்திருக்கிறார். அப்போது அவரது ரசிகர் ஒருவர்,"சீதா ராமம் படத்தின் இரண்டாம் பாகத்தை எதிர்பார்க்கலாமா?" என கேட்டிருந்தார்.
Images are subject to © copyright to their respective owners.
இதற்கு துல்கர் அளித்த பதிலில்" அதில் எனக்கு ஏதாவது கதாப்பாத்திரம் மீதி இருக்கிறதா?" எனக் கேள்வி எழுப்பி உள்ளார். இந்த ட்வீட் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.
Also Read | KGF யாஷ் கொடுத்த விருந்து.. நெகிழ்ந்துபோன துல்கர் சல்மானின் வைரல் போஸ்ட்..!