துல்கர் சல்மான் - இயக்குநர் கௌதம் மேனன், ரக்ஷன் உள்ளிட்டோர் நடிப்பில் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' திரைப்படம் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது.
இந்த படத்தை தேசிங் பெரியசாமி இயக்கியிருந்தார். இந்த படம் வெளியாகி சில நாட்களிலேயே கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் திரையரங்குகள் மூடப்பட்டன. இதனையடுத்து இந்த படத்தை தியேட்டரில் பார்க்க முடியாத சூழல் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்நிலையில் இயக்குநர் தேசிங் பெரியசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், உலக அளவில் சில பகுதிகளில் இயல்பு நிலை திரும்பி வருவது மகிழ்ச்சியளிக்கிறது. ஃபிரான்ஸ் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ஃபிரானன்ஸில் நாளை (26/06/2020) வெளியாகவிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
Happy to hear things getting back to normal in few parts of the world...France is getting back to normal and #kannumkannumkollaiyadithaal is re releasing in France from Tom 22-06-2020 #KKK pic.twitter.com/i6NMACJxd0
— Desingh Periyasamy (@desingh_dp) June 21, 2020