www.garudavega.com

இத்தனை நாளா 'லீவ்' விட்ருந்தீங்க போல ... மீம் போட்டு 'கிண்டலடிக்கும்' ரசிகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்று பிக்பாஸ் வீட்டில் பல்வேறு வரலாற்று சம்பவங்கள் நிகழ்ந்தன. குறிப்பாக போட்டியாளர்கள் தூங்கும்போது நாய் கத்தியதை நேற்று பார்க்க முடிந்தது. 50 நாட்களை பிக்பாஸ் கடந்த நிலையில் நாய் இதுவரை கத்தி யாரும் கேட்கவில்லை. நேற்று கேப்டன் ரியோ வெளியே இருந்தபோது நாய் கத்தியது. இதையடுத்து அவர் உள்ளே சென்று பார்க்க, யாரும் தூங்கவில்லை என அர்ச்சனா சூடம் ஏற்றாத குறையாக சத்தியம் செய்தார்.

Due to Cyclone Contestants exits from Bigg Boss House

உண்மையில் நிஷா தூங்கியதை பார்த்துத்தான் நாய் கத்தி இருக்க வேண்டும் என்பது ரசிகர்களின் எண்ணம். இதைப்பார்த்த ரசிகர்கள் இத்தனை நாளா அதுக்கு லீவ் எதுவும் குடுத்து இருந்தீங்களா பாஸ்? என கிண்டலடித்து வருகின்றனர். மேலும் நிவார் புயல் காரணமாக போட்டியாளர்கள் வீட்டைவிட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட இருப்பதை பிக்பாஸ் அறிவித்தார். அனைவரும் வெளியேறிய காட்சிகள் காண்பிக்கப்பட்டன. இதனால் தான் வேக்கப் சாங் நேற்று முன்தினம் ஒளிபரப்பாகவில்லை போல.

இதைப்பார்த்த நெட்டிசன்கள் நிவார் காரணமாக போட்டியாளர்கள் அனைவரும் எலிமினேட் செய்யப்பட்டதாக மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர். இதற்குமுன் மூன்று சீஸன்களிலும் இதுபோன்ற எந்தவொரு இயற்கை பேரிடரும் இல்லை என்பதால் இதுவே போட்டியாளர்கள் அனைவரும் முதன்முறையாக வெளியேறிய சம்பவமாக உள்ளது. வீட்டின் கேப்டனை நாமினேட் செய்யக்கூடாது என்பது விதி. ஆனால் கேப்டன் ரியோ நேற்று ஜெயிலுக்கு அனுப்பப்பட்டார். இது எதனால் என்பது தெரியவில்லை. இதுபோல பல்வேறு வரலாற்று சம்பவங்கள் நேற்று பிக்பாஸ் வீட்டில் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Due to Cyclone Contestants exits from Bigg Boss House

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.