நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் ‘சுல்தான்’ திரைப்படத்தின் தலைப்பு குறித்து எழுந்த சர்ச்சைக்கு தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகர் கார்த்தி மற்ரும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி வரும் ‘சுல்தான்’ திரைப்படத்தை ‘ரெமோ’ பட இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கி வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் சென்னை, திண்டுக்கல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், இப்படத்திற்கு ‘சுல்தான்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளதால் சர்ச்சை எழுந்ததையடுத்து, ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் விளக்கம் கூறி அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், இப்படம் திப்பு சுல்தான் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாவதாகவும், அதனை திண்டுக்கல் மலைக்கோட்டையில் ஷூட்டிங் நடத்தக் கூடாது எனவும் ஒரு அமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். அதன் காரணமாக அப்பகுதியில் மாறுபட்ட கருத்தினால் இரு அமைப்பினரிடையே கருத்து மோதம் எற்பட்டது வருத்தமளிக்கிறது.
இது வரலாற்று பின்னணியோ அல்லது திப்பு சுல்தானின் வரலாற்றை பற்றிய படமோ அல்ல என தெரிவித்துக் கொள்கிறோம். சமீபகாலமாக சுய விளம்பரம் தேடும் நோக்கில் திரைப்படங்களை தனி நபர்களும், சில அமைப்புகளும் தாக்குவது அதிகரித்து வருகிறது. ஒரு திரைப்படம் எதை காண்பிக்கக்கூடாதென்பதை உறுதி செய்ய தணிக்கக் குழு உள்ளது.
மேலும், வரலாற்று தலைவர்களுக்கும், தேசிய தலைவர்களுக்கும், தேசிய தலைவர்களுக்கும் சாதி மத அடையாளங்கள் பூசி அவர்களின் வாழ்வையும், நமது வரலாற்றையில் கொச்சைப்படுத்தும் செயல்களுக்கும் எங்களின் கண்டனத்தை பதிவு செய்துக் கொள்கிறோம்’ என தெரிவித்துள்ளது.
#Sulthan #Karthi #Karthi19 pic.twitter.com/FXdX8Gd6sI
— DreamWarriorPictures (@DreamWarriorpic) September 26, 2019