கொரோனா நோய் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க பிரதமர் மோடி 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து மக்கள் அனைவரும் வீட்டில் அடைந்து உள்ளனர். வேலை செய்பவர்களும் வீட்டிலிருந்தே வேலை செய்கின்றனர். இந்த நிலையில் நடுத்தர மக்களுக்கும் ஏழை மக்களுக்கும் மிகுந்த இந்த கடினமான சூழல் உருவாகியிருக்கிறது.
சினிமா தொழிலா தொழிலாளர்கள் சினிமா தொழிலாளர்கள் சங்கமான பெப்சியில் தலைவர் ஆர்கே செல்வமணி சமீபத்தில் நடிகர்களுக்கு ஒரு கோரிக்கை வைத்தார். அதில் சினிமா தொழிலாளர்கள் பலர் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் வேதனைப்படுகிறார்கள் என்றும், நடிகர்கள் தாமாக முன்வந்து அவர்களுக்கு உதவ வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். இதனையடுத்து பல ஊழியர்கள் எடுத்து பல நடிகர்களும் இலட்சக்கணக்கில் பணமும் அரிசியும் பெப்ஸி சங்கத்திற்கு அளித்து வருகின்றனர். பலர் பொதுமக்களுக்கும் தங்களால் முடிந்த உதவியை செய்து வருகின்றனர்.
கடந்த பிப்ரவரி மாதம் பல சர்ச்சைகளுக்கு இடையே ரிலீசான படம் திரௌபதி. சர்ச்சைகள் ஒரு பக்கம் என்றாலும், மக்களும் அந்த படத்தை ஆதரித்தனர். இந்நிலையில் அந்த அந்த படம் வெற்றி பெற்றது. படத்தின் தயாரிப்பாளரான மோகன்ஜி சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார். பல நடிகர்கள் செய்யும் உதவிகளை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு அவர்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லுகிறார். அப்படிப்பட்ட ஒரு பதவிற்க்கு கீழ் ரசிகை ஒருவர் "எல்லாம் சரி கொரோனாவிற்காக நீங்கள் என்ன செய்தீர்கள் என்று கேட்க, அவர் நான் ஏற்கனவே 35 ஆயிரம் உதவி செய்துவிட்டேன். இந்த நிலையில் என்னால் முடிந்தது அதுதான்"என்று கூறியுள்ளார்
35000 Rs help panni iruken mam.. That's what I can do in this stage.. https://t.co/b5Uyv1Xuck
— Mohan G 🔥😎 (@mohandreamer) April 7, 2020