'திரௌபதி' இயக்குநர் மோகன்.ஜி Behindwoods TVக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ''திரௌபதி படம் நடிக்கும் போதே நடிகர் ரிச்சர்டு என்னிடம் சொல்லிவிட்டார். இந்த படம் கண்டிப்பா ஹிட். அடுத்த படம் நாம பண்றோம். கதை ரெடி பண்ணிக்கோங்க என்றார். ஏன்னா அவர் சினிமா குடும்பத்தில் இருந்து வந்தவர்.
நானும் அடுத்த படம் நடிகர் ரிச்சர்டுடன் தான் செய்வது என்று உறுதியாக இருந்தேன். இடையில் ஒரு ஹீரோ என்னுடன் படம் பண்ணுவதில் உறுதியாக இருந்தார். ஆனால் நாங்கள் ரிச்சர்டுடன் தான் படம் செய்யவிருக்கிறேன் என்று சொல்லிவிட்டேன். ரசிகர் ஒருவர் என்னிடம் சிம்புவுடன் ஒரு படம் செய்வீர்களா என்று கேட்டதற்கு, அவர் ரெடி என்றால் நான் தயாராக இருக்கிறேன். என்னிடம் கதை கூட இருக்கிறது. என்று பதிலளித்தேன்.
உடனடியாக ஒரு தயாரிப்பாளர் போன் செய்து, என்னிடம் சிம்புவின் கால்ஷீட் இருக்கிறது. நீங்க ஓகேனு சொல்லுங்க பண்ணிடலாம் என்று சொன்னார். எனது அடுத்த படம் நல்லபடியா ரிலீஸ் ஆகி ஹீட் ஆனால் கண்டிப்பாக சிம்புவுடன் எதிர்பார்க்கலாம். அது ஒரு கேங்க்ஸ்டர் கதை. மீனவ மக்களுக்கு அது தேவைப்படும் மேட்டராக இருக்கும். வட சென்னைய மையப்படுத்தி ஒரு கேங்க்ஸ்டர் படம், அது கண்ஃபார் கிடையாது. என்னுடைய எண்ணம் மட்டுமே. சிம்பு விருப்பப்ட்டால் நான் ரெடி''. என்றார்.