தெலுங்கு திரைபபட உலகில் ஆக்ஷன் படங்களில் நடித்து முன்னணி நடிகராக புகழ் பெற்றவர் டாக்டர் ராஜசேகர்.
இவர் பிரபல நடிகை ஜீவிதாவை திருமணம் செய்துகொண்டார். இதுதான்டா போலீஸ் படத்தின் மூலம் தென்னிந்தியா முழுமைக்கும் பிரபலமானார். இவர் தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழில் புதுமைப்பெண், புதிய தீர்ப்புகள், மீசைக்காரன், மன்னிக்க வேண்டுகிறேன், ஆம்பள, அக்கா போன்ற தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.
இவரின் தந்தை ஒய்வு பெற்ற காவல்துறை துணை ஆணையர் வரதராஜன் ஆவார். நேற்று (04.11.2021) மாலை 6.30 மணியளவில் வயது மூப்பு காரணமாக ஐத்ராபாத்தில் உயிரிழந்தார். இவருக்கு வயது 94. வரதராஜனின் உடல் இன்று சென்னைக்கு எடுத்து வரப்படுகிறது. இன்று (05.11.2021) மாலை 4 மணியில் இருந்து சென்னை அண்ணாநகரில் (No. 26, AI Block, 8th Main Road, Annanagar, Chennai 40) உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.
நாளை (06.04.2021) நண்பகலில் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கு 3 மகன், 2 மகள்கள் உள்ளனர்.