Fakir Others Banner USA

BREAKING - SK16-ல் ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடி சிவா இல்ல இவர் தான்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘SK16' திரைப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் கதாபாத்திரம் மற்றும் அவருக்கு ஜோடியாக நடிக்கும் ஹீரோ குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

DOP Natty plays Aishwarya Rajesh's love interest in Sivakarthikeyan - Pandiraj's SK16

சிவகார்த்திகேயன் நடிக்கும் SK16 திரைப்படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்குகிறார். சிவகார்த்திகேயனை ‘மெரினா’ திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் செய்தவர் பாண்டிராஜ். இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சமுத்திரக்கனி, பாரதிராஜா, அனு இம்மானுவேல், அர்ர்சனா, ரமா, ஆர்.கே.சுரேஷ், சூரி, யோகி பாபு, வேலராமமூர்த்தி, சுப்பு பஞ்சு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.

இந்நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், அவர் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடிக்கிறார் என்ற தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன. மேலும், அண்ணன் - தங்கை பாசத்தை மையமாகக் கொண்டு கிராமிய பின்னணியில் உருவாகும் இப்படத்தில் ஐஸ்வர்யாவுக்கு ஜோடியாக ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி (எ) நட்ராஜ் நடிக்கவிருப்பதாக தெரிகிறது.

இப்படத்தில் மற்றொரு முக்கிய வேடத்தில் இயக்குநர் இமயம் பாரதிராஜா நடிப்பதாகவும் தெரிகிறது. SK16 திரைப்படத்தின் ஷூட்டிங் தற்போது காரைக்குடி அருகே நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படம் குறித்த கூடுதல் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

DOP Natty plays Aishwarya Rajesh's love interest in Sivakarthikeyan - Pandiraj's SK16

People looking for online information on Aishwarya Rajesh, Pandiraj, Sivakarthikeyan, SK16, Sun pictures will find this news story useful.