பிரபல இசையமைப்பாளர் வாஜித் கான் தனது 42-வது வயதில் இன்று மரணமடைந்தார். சாஜித் - வாஜித் ஆகிய இணை இசையமைப்பாளர்கள் இருவரும் இணைந்து இந்தியில் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளனர். விசேஷமாக பிரபுதேவாவின் 'தபாங்' படத்திற்கும் இவர்கள்தான் இசையமைத்தார்கள். இந்நிலையில் இந்த செய்தி இந்தி சினிமா ரசிகர்களின் தலையில் இடி போல விழுந்துள்ளது. அவருக்கு இசையமைப்பாளர் அனிருத் இரங்கல் தெரிவித்து இருந்தார்.
இந்திய சினிமாவில் சமீப காலமாகவே துக்க செய்திகள் அதிகரித்து வருவது ரசிகர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் அவரது மரணத்திற்கு கொரோனா நோய் காரணம் என்று பலர் வதந்தி பரப்புகின்றனர். இதனை மறுக்கும் விதமாக அவரது நெருங்கிய நண்பர் சலீம் மெர்ச்சன்ட் கூறும் பொழுது "அவர் கிட்னியில் நோய்த்தொற்று காரணமாக மிகவும் சிரமப்பட்டார். இந்நிலையில் கடந்த ஆண்டு அவருக்கு கிட்னி மாற்று சிகிச்சை நடைபெற்றது. ஆனாலும் அவர் உடல் நிலையில் பெரிய முன்னேற்றம் இல்லை" என்று கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.