www.garudavega.com

DNA முடிச்சு அவிழ்ந்தது.. ஹேமாவுக்கு உண்மை தெரிந்தது.. கண்ணம்மாவின் அடுத்த முடிவு இதுவா? BHARATHI KANNAMMA

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகும் தொடர்களில் ஒன்றான பாரதி கண்ணம்மா, தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

DNA result family reunion will Bharathi Kannamma end

பாரதி மற்றும் கண்ணம்மா ஆகியோர் பிரிந்து வாழ தொடங்கி, அவர்களின் குழந்தைகள் தனித்தனியாக வாழ, பின்னர் அவர்கள் குறித்த உண்மையும் தெரிய வர இப்படி பாரதி கண்ணம்மாவில் வரும் ஒவ்வொரு நகர்வும் விறுவிறுப்பை கூட்ட தான் செய்தது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலின் சமீபத்திய எபிசோடில், பாரதி வெண்பாவை திருமணம் முற்பட்டதால் பாரதியின் குடும்பம் மற்றும் பாரதியிடம் வளர்ந்து வந்த குழந்தை ஹேமா அனைவருமே பாரதியை வெறுத்தனர். மேலும் வெண்பாவுக்கு ரோகித்துடன் திருமணம் நடந்து விட்டது. குழந்தை லட்சுமிக்கு ஏற்கனவே தனது அப்பா பாரதி தான் என்பதும், தன் தங்கை ஹேமா தான் என்பதும் தெரியும்.

இதனிடையே குழந்தை ஹேமா தான் ஒரு வளர்ப்பு பிள்ளை என்பதால் தன்னை ஆசிரமத்தில் கொண்டு விடச் சொல்லி அனைவரையும் வற்புறுத்த அப்போது கண்ணம்மா, "நீ எனக்கு பிறந்த இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தை தான். உன்னை யாரும் ஆசிரமத்தில் தூக்கிக் கொண்டு விட்டு விட்டார்கள். அதன் பிறகு உன்னை உன் தந்தை எடுத்து வளர்த்தார். மற்றபடி நான் தான் உன் அம்மா" என உண்மையை போட்டு உடைத்து விட்டார். மேலும் ஹேமாவை கடத்தி செல்லும் வெண்பா கும்பலிடம் இருந்து காப்பாற்றும் முயற்சியில் கண்ணம்மா ஈடுபட்டார்.

இன்னொரு பக்கம் பாரதி கொடுத்திருந்த டி.என்.ஏ சாம்பிள்களை டெஸ்ட் பண்ணிய டெல்லி டாக்டர், குழந்தைகள் அவருக்கும் கண்ணம்மாவுக்கும் பிறந்தவர்கள்தான் என உறுதிபட கூற, கலங்கிப்போன பாரதி கண்ணீருடன் ஓடி வருகிறார். அதற்குள் மாடியில் இருந்து குதிக்கப் போவதாக ஹேமா ஆர்ப்பாட்டம் பண்ண, இறுதியாக வந்த பாரதி, “நான் தான் உன் அப்பா.. கண்ணம்மா என் மனைவி.” என சொல்லி தடுத்து நிறுத்துகிறார்.

இந்நிலையில்தான்,  “குழந்தைகளுக்கு உண்மை தெரிந்துவிட்டது, பாரதியும் கண்ணம்மாவை ஏற்றுக்கொண்டுவிட்டார். பிறகு  என்ன? அவர் தன் மனைவி கண்ணம்மா மற்றும் குழந்தைகளுடன் வாழத் தொடங்குவார் என்பதால் சீரியல் முடிந்து அடுத்த சீசன் பாரதி கண்ணம்மா தொடங்கிவிடும்” என்று ஒரு சாரரும், “என்னை நம்பவில்லை. ஒரு டிஎன்ஏ ரிப்போர்ட் பேப்பரைதான் நம்புகிறீர்கள்? அப்படியானால் என் மீது நம்பிக்கை இல்லையா? என கண்ணம்மா பாரதி மீது கோபித்துக்கொண்டு சென்றுவிடுவார், இன்னும் கொஞ்ச காலம் கண்ணம்மா பின்னால் பாரதி சுற்றுவார், அதிலும் வெண்பா எதாவது தலையிட்டு சூழ்ச்சி செய்வார்” என சில ரசிகர்களும் கூறி வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

DNA result family reunion will Bharathi Kannamma end

People looking for online information on Bharathi Kannamma, Bharathi Kannamma New Promo, Bharathi Kannamma Serial Today, Bharathi Kannamma Sertial today episode, Bharathi Kannamma Sertial today Promo will find this news story useful.