இந்தியாவின் புகழ் பெற்ற இதிகாசங்கள் மகாபாரத் மற்றும் ராமாயணம். அவற்றில் ஒன்றாக இந்தியாவின் மிக முக்கியமான தொன்ம புராண கதையான மகாபாரதம் விளங்கி வருகிறது.
Also Read | தஞ்சைக்கு அழைத்த ”ஆதித்த கரிகாலன்” விக்ரம்... "வந்தியத்தேவன்" கார்த்தியின் வைரல் Request.!
இந்த மகாபாரதத்தை பலரும் மேடை நாடகங்களாக, சின்னத்திரை தொடர்களாக இயக்கி வெளியிட்டிருக்கின்றனர். பல முன்னணி சேனல்களில் ஒளிபரப்பான மகாபாரதத் தொடர்களுக்கு நல்ல வரவேற்பு இருந்ததுடன் அவற்றில் சில தொடர்கள் ஐகானிக் தொடர்களாகவும் அமைந்தன. அதாவது மகாபாரதம் என்றாலே அந்தத் தொடர்தான், மகாபாரத கதை மாந்தர்கள் என்றாலே அந்த தொடரில் நடித்த நடிகர்கள் தான் என்று பலருக்கும் நினைவுக்கு வரும் வகையில் அவை அமைந்திருக்கின்றன.
மகாபாரத் கான்செப்ட் ஆர்ட் போஸ்டர்
இதேபோல் மகாபாரத இதிகாச கதையை ஒட்டி இந்த கதைக்குள் வரும் சில கதாபாத்திரங்கள் அல்லது தனி கதாபாத்திரங்கள் கொண்டு மட்டுமே பல திரைப்படங்கள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. உதாரணமாக தமிழில் கர்ணன் திரைப்படம் மகாபாரதத்தில் வரும் கர்ணன் என்கிற குறிப்பிட்ட கதாபாத்திரத்தை சுற்றிய கதையாக பி.ஆர்.பந்துலுவின் இயக்கத்தில் பல வருடம் முன்பு மறைந்த நடிகர் திலகம் சிவாஜி நடிப்பில் வெளியாகியிருந்தது.
மகாபாரத் கான்செப்ட் ஆர்ட் போஸ்டர்
இந்நிலையில், உலக அளவில் இந்திய புராணக் கதையான மகாபாரதத்தை எடுத்துச் செல்லும் புதிய முயற்சியை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் கையில் எடுத்திருக்கிறது. அதன்படி, அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற்று வரும் டி23 எக்ஸ்போவில், பிரபல முன்னணி ஓடிடி தளமான டிஸ்னி + ஹாட்ஸ்டார் தயாரிப்பு நிறுவனம், தாங்கள் எடுக்கப் போகும் 3 பிரம்மாண்ட வெப் தொடர்களின் அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றது. இந்த இந்த மூன்று பிரம்மாண்ட வெப் தொடர்களில் ஒன்றாக மகாபாரதம் இடம் பெற்றிருக்கிறது
மகாபாரத் கான்செப்ட் ஆர்ட் போஸ்டர்
ஆம், மது மந்தேனா மற்றும் அல்லு என்டர்டெயின்மென்ட்டுடன் இணைந்து ‘மகாபாரத்’ எனும் புதிய பிரம்மாண்ட வெப் தொடரை டிஸ்னி நிறுவனம் தயாரிக்கிறது. இதுபற்றி டிஸ்னி + ஹாட்ஸ்டாரின் தலைவர் கவுரவ் பானர்ஜி பேசும்போது, “இந்தியாவின் இதிகாசக் கதையை, உலகளாவிய பார்வையாளர்களுக்கு அடுத்த ஆண்டு கொண்டு வருவது உண்மையில் எங்கள் பாக்கியம்” என்றும், இந்தத் தொடர் மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதேபோல் இப்படத்தின் தயாரிப்பாளர் மது மந்தேனா பேசும்போது, “பழமையானதுதான் மகாபாரதம் என்றாலும் இன்றும் நம்முடைய வாழ்க்கைக்கு உகந்த பல கருத்துகள் இதில் உள்ளன. இதைத் தயாரிப்பதில் பெருமை கொள்கிறோம்!” என்று பேசியுள்ளார்.
Also Read | Raghava Lawrence: “இனி என் அறக்கட்டளைக்கு நன்கொடை வேண்டாம்!” - லாரன்ஸின் திடீர் முடிவின் பின்னணி இதுவா?