தென்னிந்திய திரைத்துறை பிரபலங்கள் அடுத்தடுத்து மரணிக்கும் சம்பவங்கள் திரைத்துறையை அதிரவைத்துள்ளன.
அண்மையில் நடிகர் விவேக், நடிகர் பாண்டு, இயக்குநர் தாமிரா, இயக்குநர் கே.வி.ஆனந்த், பாடகர் டிகேஎஸ் நடராஜன், நடிகர் 'மாரி' செல்லதுரை, பழம்பெரும் நடிகர் கல்தூண் திலக் உள்ளிட்டோர் அண்மைக்காலமாக உயிரிழந்தனர்.
இந்நிலையில் நடிகர் விஜய புரிவீரன் ஆனந்தன் (படத்தில் வலதுபுறம் உள்ளவர்) அவர்களின் மகனும், டிஸ்கோ சாந்தி மற்றும் லலிதா குமாரியின் சகோதரரும், நடிகரும், ஒளிப்பதிவாளருமான அருண்மொழிவர்மன் (வயது 52) இன்று (9.05.2021) காலை காலமானார். அவருக்கு ஷர்லி என்ற மனைவியும், அப்ரினா, மகாலட்சுமி என்ற இரண்டு மகள்களும் உள்ளனர்.
இதேபோல், நடிகர், தயாரிப்பு மேற்பார்வையாளர், தயாரிப்பாளர் அந்தோணி சேவியர் (படத்தில் இடதுபுறம் உள்ளவர்) மரணம் அடைந்துளார். நான் மகான் அல்ல, சிறுத்தை, மாஸ், பாண்டிய நாடு, ஜீவா, பாயும்புலி, நோட்டா, அயோக்யா, சக்ரா, ஈஸ்வரன் போன்ற பல படங்களுக்கு நிர்வாக தயாரிப்பாளராக பணி புரிந்தவர் அந்தோணி சேவியரின் வயது 51. சுசீந்திரன் இயக்கத்தில் “நெஞ்சில் துணிவிருந்தால்” படத்தை தயாரித்த இவர் பல படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் குடும்பத்துடன் சொந்த ஊரான தூத்துகுடிக்கு சென்ற இடத்தில் ஹார்ட் அட்டாக் ஆகி இன்று காலை சுமார் 11 மணியளவில் மரணமடைதுள்ளார். எனினும் அவரது உறவினர்கள் பெரும்பாலும் மதுரை புதூரில் வசித்து வருவதால் அவரது பிரேதம் மதுரைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்படவிருக்கிறது. இவருக்கு, மனைவி ஜோஸ்பின் ஜெயா, கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் மகள் அபி, 18 வயதில் ஜெய்சன் என்ற மகனும் இருக்கிறார்கள்.
ALSO READ: கொரோனாவுக்கு எதிரான போரில் விஜய் Fans.. நெகிழவைக்கும் செயல்கள்.. குவியும் பாராட்டுகள்!