இயக்குனர் விஷ்னுவர்தன் தல அஜித் அவர்களுக்கு பில்லா, ஆரம்பம் என இரண்டு மிகப்பெரிய வெற்றிப்படங்களை கொடுத்தவர்.
தற்போது இயக்குனர் விஷ்னுவர்தன் கார்கில் போரில் வீரமரணம் அடைந்த Captain Vikram Batra என்பவருடைய Biopic திரைப்படத்தை Shershaah என்ற பெயரில் இந்தியில் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் நேற்று (12.08.2021) அமேசான் பிரைமில் வெளிவந்தது. வெளிவந்ததிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், விமர்சனத்தையும் பெற்றுள்ளது.
எல்லையில் ராணுவ வீரர்களின் மரணம் என நாம் செய்திகளில் எப்பவும் பார்க்கும் ஒரு விஷயத்தின் பின்னால் உள்ள அந்த ரானுவ வீரரின் மரணத்தால் அந்த குடும்பம், வீரனின் காதல், நண்பர்கள், சக ராணுவ வீரர்களை அந்த மரணம் எப்படி பாதிக்கிறது என்பதை திரைக்கதை வடிவத்தில் சொன்ன விதம் படத்தை வெற்றி பெற வைத்துள்ளது.
முன்னர் இயக்குனர் விஷ்னுவர்தன் பில்லா (2007) படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் விஷ்னுவர்தன் மீண்டும் தல அஜித்துடன் பில்லா 2 (2012) படத்தில் இணைவதாக இருந்தது. ஆனால் பவன் கல்யானின் பாஞ்சா படத்தில் பணிபுரியும் நாட்களும், பில்லா 2 படத்தின் நாட்களும் ஒரே காலகட்டத்தில் மோதியதால் முதலில் ஒப்பந்தமான பாஞ்சா படத்தை இயக்கும் பொருட்டு பில்லா 2 படத்தில் இருந்து விலகினார்.
இந்நிலையில் இயக்குனர் விஷ்னுவர்தன் நமது Behindwoodsக்கு அளித்துள்ள பேட்டியில் பல சுவாரஸ்யமான கேள்விகளுக்கு ஜாலியாக பதில் அளித்துள்ளார். அதிலும் குறிப்பாக பில்லா படத்தின் மூன்றாம் பாகம் பற்றிய கேள்விக்கு சுவாரஸ்யமான பதிலை அளித்துள்ளார். அதில் "இதுவரை எந்த திட்டமும் அப்படி இல்லை, பில்லா முதல் பாகம் கூட எவ்வித திட்டமும் முன் இல்லாமலே தொடங்கியது. சில படங்களை மீண்டும் எடுக்காமல் இருப்பதே அதன் தனித்தன்மையை தக்கவைக்கும். பில்லா படமும் அப்படியே இருக்கட்டும்" என்று கூறியுள்ளார்.
மேலும் பேட்டியில் விஜய், ஆர்யா, யுவன் சங்கர் ராஜா, மணிரத்னம், சந்தோஷ் சிவன் பற்றிய கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளார்.