காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
Also Read | YUVANISAM: அரவிந்தன் to வலிமை… 25 ஆண்டு பயணம்- ரசிகர்களின் வாழ்த்து மழையில் யுவன்
காத்துவாக்குல ரெண்டு காதல்…
’போடா போடி’, ’நானும் ரௌடிதான்’, ’தானா சேந்த கூட்டம்’ ஆகிய திரைப்படங்களுக்குப் பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவன், நயன்தாரா - விஜய் சேதுபதி -சமந்தா ஆகியோரை வைத்து ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்துக்கு விக்னேஷ் சிவனின் ஆஸ்தான இசையமைப்பாளரான அனிருத் இசையமைத்துள்ளார். விக்னேஷ் கார்த்திக் மற்றும் எஸ் ஆர் கதிர் ஆகிய இருவரும் ஒளிப்பதிவு செய்துள்ளனர். இந்த படத்துக்கு சென்சார் போர்டு UA சான்றிதழ் வழங்கியது. ரெட்ஜெயிண்ட் மூவிஸ் நிறுவன வெளியீடாக ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியானது. இந்த படத்தில் காதீஜாவாக சமந்தாவும், கண்மணியாக நயன்தாராவும், ராம்போ என்ற கதாபாத்திரத்தி விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். ஒரே நேரத்தில் இரண்டு பேரையும் காதலிக்கும் நபராக விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.
விமர்சனங்கள்…
இந்த படம் ரிலீஸூக்குப் பின் பார்வையாளர்களிடம் பரவலான வரவேற்பைப் பெற்றன. அதே போல படத்தைப் பற்றி சில எதிர்மறை விமர்சனங்களும் வைக்கப்பட்டன. இந்நிலையில் படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் விமர்சனங்களுக்கான தன்னுடைய கருத்தைப் பகிர்ந்துள்ளார். அதில் “பெரும்பான்மையான பொது மக்களின் ரசனைகளிலிருந்து தனித்த ஒரு சில சினிமா விமர்சகர்களின் கூற்றுகளை பொய்யாக்கி திரையரங்குகளை திருவிழாவாக மாற்றி வரும் தமிழ் மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். மக்களின் பேவரைட்… காத்து வாக்குல ரெண்டு காதல். உங்கள் அருகில் உள்ள திரையரங்குகளுக்கு சென்று படத்தைப் பார்த்து ரசியுங்கள்” எனக் கூறியுள்ளார். விக்னேஷ் சிவனின் இந்த ட்வீட் இப்போது இணையத்தில் அதிக கவனத்தைப் பெற்றுள்ளது.
விக்னேஷ் சிவனின் பேவரைட் சீன்….
இந்நிலையில் இப்போது படத்தில் தனக்குப் பிடித்தமான காட்சி பற்றி இயக்குனர் விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ள தகவல் இணையத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது. படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா இருவரிடமும் பேசும் அந்த காட்சியின் ப்ரோமோவைப் பகிர்ந்துள்ள அவர் “ எனக்கு பிடித்த இந்த காட்சியை படமாக்கிய நாள்தான் ஷூட்டிங்கில் சிறந்தநாள். இந்த காட்சியில் விஜய் சேதுபதி மேஜிக்கை நிகழ்த்திவிட்டார். ஒவ்வொரு முறையும் இந்த காட்சியை நான் பார்க்கும்போது அவரை நினைத்து வியந்து போகிறேன். இந்த காட்சி தனிப்பட்ட முறையில் எனது சிறந்த பணிகளில் ஒன்றாக இருக்கும். ஒளிப்பதிவாளர் கதிர் இந்த காட்சியை ஒரே ஷாட்டில் எடுத்து வித்தியாசமான அனுபவத்தைக் கொடுத்துள்ளார். உங்களுக்காக அந்த காட்சியின் சிறு ப்ரோமோ… முழுக்காட்சியையும் பார்க்க உங்கள் அருகில் இருக்கும் திரையரங்குக்கு செல்லுங்கள்” எனக் கூறியுள்ளார்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8