தமிழ் சினிமாவில் நாவல்களை படமாக்குவதில் வல்லவரான இயக்குனர் வெற்றிமாறன் தனது அடுத்த படமான வாடிவாசலில், எழுத்தாளர் "சி சு செல்லப்பா" அவர்கள் எழுதிய குறு நாவலான வாடிவாசலுக்கு திரைக்கதை அமைத்து இயக்குகிறார்.
இதற்கு முன் வெற்றிமாறன் இயக்கிய "அசுரன்" மற்றும் "விசாரணை" படங்களும் தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் "விடுதலை" படமும் நாவல்களையும் சிறுகதைகளையும் அடிப்படையாகக் கொண்டதே. இயக்குனர் வெற்றிமாறன் ‘அசுரன்’, 'பாவக்கதைகள்' படங்களைத் தொடர்ந்து நடிகர் சூரியுடன் இணைந்து பணியாற்றும் “விடுதலை” படத்தை இயக்கி வருகிறார்.
முதல் முறையாக வெற்றிமாறன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில், கலைப்புலி தாணு தயாரிக்கும் "வாடிவாசல்" படத்தின் டைட்டில் லுக் சில நாட்களுக்கு முன் வெளியானது. வெளியானதிலிருந்து ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்ப்பை பெற்றது.
வாடிவாசல் படத்தின் வெள்ளோட்ட படப்பிடிப்பு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முதலைக்குளம் அருகே உள்ள கீழப்பட்டி கிராம மாசி சிவன் ராத்திரி களரி திருவிழா செட் அமைத்து ஜல்லிக்கட்டு காட்சிகள் படமாக்கப்பட்டன
படத்தின் பூர்வாங்க பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தருவாயில், இயக்குநர் வெற்றிமாறன் கேரளா மாநிலத்தில் நடைபெற்ற International Film Festival of Kerala 2022ல் சினிமா பற்றிய கலந்துரையாடல் நிகழ்வில் கல்ந்து கோண்டார். இதில் மலையாள இயக்குனர்கள் லிஜோ ஜோசப் பெலிஸ்ஸரி, கமல், சிபி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய வெற்றிமாறன், "ஒரு காலத்தில் தமிழ் சினிமா கதாநாயகிகளுக்கு தமிழ் தெரிந்தால் வாய்ப்பு தர மாட்டார்கள், தமிழ் பேச தெரியாத மற்ற மொழி நடிகைகளையே நடிக்க வைத்தனர். தற்போது இந்த சூழல் மாறி உள்ளது." என கூறினார். மேலும் தனது முதல் இரண்டு படங்களில் தமிழ் தெரியாத நாயகிகளை நடிக்க வைத்ததாகவும், அதிலும் இரண்டாவது படத்தின் நாயகிக்கு தமிழ் தெரியாத்தால் லாங் ஷாட், டார்க் லைட்டிங்கில் இரவில் அதிக படப்பிடிப்புகளை நடத்தியதாகவும் கூறினார்.