அஜித் குமார் நடிக்கும் துணிவு படத்தின் டிரைலர் இன்று வெளியாகி இருக்கிறது. இந்நிலையில், இயக்குனர் வெங்கட் பிரபு பகிர்ந்துள்ள ட்வீட் ரசிகர்களிடையே வைரலாக பரவி வருகிறது.
நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பிறகு நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம் 'துணிவு'.
இந்த படத்தை H. வினோத் இயக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, போனி கபூர் தயாரிக்கிறார். ஐத்ராபாத், சென்னை, விசாகப்பட்டினம், பேங்காக் நகர்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது. இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது.
இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கன் இந்த படத்திலும் நடித்துள்ளார். பிரபல இளம் தமிழ் சினிமா நடிகர் வீராவும் இந்த படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். மேலும் பிக்பாஸ் பிரபலங்களான பவனி & அமீர் இருவரும் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் கலை இயக்குனராக மிலன் பணிபுரிய, சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார். இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார்.
துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. மேலும் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது. துணிவு படத்தின் ஆடியோ உரிமத்தை ஜி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் துணிவு படத்தின் கதாபாத்திர போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. இந்த துணிவு படத்தின் டிரெய்லர் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி டிரெய்லர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனால் ரசிகர்கள் பெரும் குஷியில் உள்ளனர்.
இந்நிலையில், அஜித் குமார் நடிப்பில் வெளியான மங்காத்தா படத்தை இயக்கியிருந்த வெங்கட் பிரபு அந்த படத்தின் வசனத்துடன் துணிவு டிரெய்லரை பகிர்ந்திருக்கிறார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,"Money Money Money!!! The bad guy is BACK" எனக் குறிப்பிட்டுள்ளார். மங்காத்தா படத்தில் அஜித் பேசிய மணி, மணி வசனம் ரசிகர்களை பெருமளவு ஈர்த்தது. இந்நிலையில் வெங்கட் பிரபுவின் இந்த ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.
Money Money Money!!! The bad guy is BACK!! https://t.co/reGyqWOSZP #ThunivuTrailer 🔥 🔥 🔥
— venkat prabhu (@vp_offl) December 31, 2022