சென்னை: வலிமை படத்தின் FDFS டிக்கெட் குறித்து இயக்குனர் வெங்கட்பிரபு, அவர் தம்பி பிரேம்ஜி, அவர் தந்தை கங்கை அமரன் பேசியது டிவிட்டரில் வைரலானது.
சில நொடிகளில் தீர்ந்த வலிமை படத்தின் FDFS டிக்கெட்டுகள்.. மாஸ் காட்டும் அஜித் ரசிகர்கள்
வலிமை படம் 2022 பிப்ரவரி 24 ஆம் தேதி ரிலீசாகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளிலும் வருவதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. வலிமை படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை மிகப்பெரிய விலைக்கு மதுரை அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது. வரலாற்றில் முதல் முறையாக மதுரை மாவட்டத்தில் உள்ள 27 தியேட்டர்களிலும் வலிமை படம் மட்டுமே திரையிட்ப்பட உள்ளது. இதனை அந்தந்த தியேட்டர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. கிட்டத்தட்ட 45 முதல் 50 திரைகள் வரை உள்ள மதுரை மாவட்டத்தில் குறைந்தது 45 திரைகளில் வலிமை படம் வெளியாக உள்ளது.
இந்த படத்திற்கான டிக்கெட் புக்கிங் ரிசர்வேசன் தொடங்கி படு ஜோராக முன்பதிவு நடந்து வருகிறது. சென்னை கிருஷ்ண வேனி, கிரீன் சினிமாஸ் ஆகிய திரையரங்குகளில் முதல் நாள் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுவிட்டன. திருச்சியில் 95% டிக்கெட்டுகள் விற்றுவிட்டன. மதுரையில் 70% டிக்கெட்டுகள் விற்றுவிட்டன. அதே போல் திண்டுக்கல், நெல்லை மாவட்டங்களிலும் டிக்கெட்டுகள் அதிக அளவில் விற்று வருகின்றன. வலிமை படத்தின் டிக்கெட்டுக்கு சந்தையில் நல்ல ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அஜித்தின் மங்காத்தா பட இயக்குனர் வெங்கட்பிரபு டிவிட்டரில் பதிவிட்டு வலிமை படத்தின் FDFS (முதல் நாள் முதல் காட்சி) டிக்கெட் கிடைத்ததாக பதிவிட்டார். அந்த பதிவில் பிரேம்ஜி தனக்கும் ஒரு டிக்கெட் வேண்டும் என கேட்டார். ஆனால் அதற்கு வெங்கட்பிரபு பதில் அளிக்கவில்லை. இசூழலில் இவர்களின் தந்தை கங்கை அமரன் வெங்கட்பிரபு டிவீட்டுக்கு பதில் அளித்து, "வெங்கட், பிரேம்மையும் கூட படத்துக்கு கூட்டிட்டு போ" என கூறியுள்ளார். இந்த கலகலப்பான டிவீட்டுகள் தற்போது வைரலாகி வருகின்றன.
வலிமை படம் BOOK MY SHOW தளத்தில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்களால் விரும்பப்பட்டுள்ளது. இதுவரை இந்திய திரைப்படங்களில் அதிக ரசிகர்கள் பார்க்க ஆர்வம் காட்டும் படமாக வலிமை படம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. இதனை BOOK MY SHOW, போனிகபூர் அறிவித்துள்ளனர்.
இந்த வலிமை படத்தில் வில்லனாக கார்த்திகேயாவும், அஜித்திற்கு நண்பியாக ஹூமா குரேஷியும் நடிக்கின்றனர். ராஜ் ஐயப்பா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கதிர் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். சண்டைக்காட்சி இயக்குனராக திலிப் சுப்பராயன் பணியாற்றுகிறார்.
நிரவ் ஷா ISC ஒளிப்பதிவு செய்ய, விஜய் வேலுக்குட்டி எடிட்டராக பணியாற்றுகிறார். இயக்குனர் எச். வினோத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். போனி கபூருடன் இணைந்து ஜி ஸ்டூடியோஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. வலிமை படத்தின் சவுண்ட் மிக்ஸிங் பணிகள் சென்னை ஃபோர் பிரேம்ஸ் சவுண்ட் கம்பெனியில் சில நாட்களுக்கு முன் நடந்தன. இந்த சவுண்ட் மிக்ஸிங்குக்கு தேசிய விருது வென்ற ஆடியோகிராபர் மேடயில் ராதாகிருஷ்ணன் ராஜகிருஷ்ணன் பணிபுரிகிறார்.
ஒரே விழாவில் ரஜினி & கமல்! வலிமை வினியோகஸ்தரின் குடும்ப விழாவில் கோலாகலம்