Reliable Software
www.garudavega.com

மருத்துவமனையில் இருக்கும் இயக்குநர் வசந்தபாலனுக்கு என்ன ஆச்சு? அவரே வெளியிட்ட தகவல்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்தியாவில் கொரோனா தொற்று பெரும் அளவில் அச்சுறுத்தி வருகிறது. இதனிடையே திரைத்துறையினர் பலரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

director vasanthabalan opens up health status from hospital

கொரோனாவை விரட்டும் எளிய வழிமுறைகளான மாஸ்க், கைகளை சுத்தமாக வைத்திருத்த, தனிமனித மற்றும் சமூக இடைவெளி உள்ளிட்டவற்றுடன் தற்போது கொரோனா தடுப்பூசிகளையும் அரசு மட்டுமல்லாமல் பல்வேறு பிரபலங்களும் ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் இயக்குநர் வசந்த பாலன் தனக்கு ஏற்பட்ட கொரோனா தொற்று அனுபவங்களை பற்றி தமது வலைப்பக்கத்தில் கூறியுள்ளார்.

ALSO READ: ஓடிடியில் பாக்கணுமா?.. ஏற்கனவே ரிலீஸ் ஆன தன் படம் பற்றி பிரபல ஒளிப்பதிவாளர் வைரல் ட்வீட்!

கடந்த மார்ச் மாதம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட வசந்த பாலன், கடந்த மாதம், “அன்புள்ள நண்பர்களுக்கு!  நான் கொரோனோ பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளேன். ஆதலால் பலருடைய தொலைபேசி அழைப்பை எடுக்க இயலமுடியவில்லை.என் மீது பேரன்பு கொண்ட நண்பர்கள், மருத்துவர்கள், உறவினர்கள் சூழ இருக்கிறேன் என்பதே மனதிற்குள் ஆயிரம்  யானை பலம் கூடி வருகிறது. ஈராறு கால்கொண்டெழும் புரவியாய் மீண்டும் எழுந்து வருவேன்.” என அறிவித்திருந்தார்.

director vasanthabalan opens up health status from hospital

இந்நிலையில் தற்போது இதன் தொடர்ச்சியாக தம்முடைய அனுபவங்களை இன்று தமது வலைப்பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். அதில், “கடந்த மாதம் ஏப்ரல் 21ம் தேதி கொரானா பெருந்தொற்று கண்டறியப்பட்டு நோய் தீவிரமடைந்து  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். மிக்க கடினமான காலக்கட்டம் மருத்துவர்களின் கணிப்பைத் தாண்டி  என் நோய்த் தீவிரம் அடைந்தது. இடையறாது நாலாபக்கமும் கிடைத்த மருத்துவ ஆலோசனைகளால் நண்பர்களின் முயற்சியால் பெரும் மருத்துவர்களின் கண்காணிப்பால் செவிலியர்களின் கூர்மையான அக்கறையால் மருத்துவ உதவியாளர்களின் தன்னலமற்ற பணியால் பெருந்தொற்றை அங்குலம் அங்குலமாக கடந்தேன். இலக்கியமும் வாசிப்பும் மனசோர்வின்றி எனை இலவம்பஞ்சைப் போல மிதக்க வைத்தது இருபது நாட்கள் கடந்து விட்டதால் கொரோனா தொற்றில்லாத மருத்துவ வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளேன்.

அடுத்த வாரத்தில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பலாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.  நெருங்கிய நண்பர்களும்  உறவினர்களும்  என் குருநாதர்களும் சக இயக்குநர்களும் திரையுலக நண்பர்களும் முகமறியா முகப்புத்தக நண்பர்களும் இடையறாது என் மீது பொழிந்த பேரன்பில் மெல்ல மெல்ல வாதையின் பெருங்கொடுக்கிலிருந்து  விடுபட்ட வண்ணம் இருக்கிறேன். அன்பு சூழ் உலகில் வாழ்வது வரம் மீண்டு(ம்) வாழ வருகிறேன்!” என குறிப்பிட்டுள்ளார்.

வெயில், அங்காடித்தெரு, அரவான், காவியத்தலைவன், ஜெயில் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய வசந்தபாலன், தற்போது மாஸ்டர் அர்ஜூன் தாஸ் நடிப்பில் நண்பர்களுடன் சேர்ந்து அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் எனும் பேனரில் தானும் தயாரிக்கும் புதிய படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தின் நாயகியாக துஷாரா விஜயன் இணைந்துள்ளார். இந்நிலையில் இப்படத்தில் வசந்தபாலனின் ஆஸ்தான இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் இணைந்துள்ளார்.

ALSO READ: "ஹேண்ட்சம் .. நரகாசூரன் வருமா?.. Tenet-2 எடுப்பீங்களா?".. தாறுமாறு ரசிகர்கள்.. தெறிக்கவிட்ட இளம் இயக்குநர்!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Director vasanthabalan opens up health status from hospital

People looking for online information on Arjun Das, GV Prakash Kumar, Vasanthabalan will find this news story useful.