நடிகர், இயக்குனர் டி.பி. கஜேந்திரன் குடும்பத்தினர் அவரது நினைவுகளளை நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேகமாக பகிர்ந்துள்ளனர்.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | "வடக்கனும் கிழக்கனும்".. "சக ஏழை மனிதன் தான்".. விஜய் ஆண்டனியின் பரபரப்பு ட்வீட்!
நடிகர், இயக்குனர் டி.பி. கஜேந்திரன் கடந்த பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி காலை சென்னை சாலிகிராமம் அருணாசலம் சாலையில் உள்ள அவரது வீட்டில் தன்னுடைய 69-வது வயதில் மரணம் அடைந்தார்.
இவரது மறைவுக்கு திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்தனர். நடிகர்கள் கவுண்டமணி, செந்தில், ரமேஷ் கண்ணா, முதல்வர் ஸ்டாலின், வையாபுரி, அமைச்சர் மா. சுப்ரமணியம் உள்ளிட்ட பலர் கஜேந்திரன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இயக்குனராக டி.பி. கஜேந்திரன் வீடு மனைவி மக்கள், பட்ஜெட் பத்மநாபன், மிடில் கிளாஸ் மாதவன், பந்தா பரமசிவம், சீனா தானா எங்க ஊரு காவல்காரன், பாட்டு வாத்தியார், பாசமுள்ள பாண்டியரே, பாண்டிநாட்டு தங்கம் ஆகிய படங்களை இயக்கியவர். பல படங்களில் நகைச்சுவை & குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார்.
Images are subject to © copyright to their respective owners.
இந்நிலையில் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு மறைந்த நடிகர் டி.பி.கஜேந்திரன் குடும்பத்தினர் பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளனர். அதில், டி.பி. கஜேந்திரன் மறைவுக்கு முந்தைய அவரது உடல்நிலை குறித்து குடும்பத்தினர் பதில் அளித்துள்ளனர். அதில், "கடந்தாண்டு ஜனவரியில் கோவிட் காரணமாக அவருடைய நுரையீரல் நோயுற்றது. ஒரு வாரம் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினோம். அப்போது முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு வந்து நலம் விசாரித்து சென்றார். பின்னர் உடல் நிலை தேறி வந்தார். திரும்பவும் நுரையீரலில் நீர் கோர்த்தது. கடந்த ஜனவரியில் Brain Stroke ஏற்பட்டது. கொஞ்சம் கொஞ்சமாக நினைவுகளை இழந்தார். பிப்ரவரி 1 ஆம் தேதி அவரின் திருமண நாள் ரொம்ப ஆக்டிவாக இருந்தார். அடுத்த நாள் டிஸ்சார்ஜ் ஆனார். சோர்வாகவே அவர் இருக்கமாட்டார்." என குடும்பத்தினர் பதில் அளித்துள்ளனர்.
Also Read | "லேடி சூப்பர் ஸ்டார்னு பொதுவாதான் சொன்னேன்.. நயன்தாரா மேல மரியாதை இருக்கு" - மாளவிகா மோகனன்..