இயக்குநர் சுசீந்திரன் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களை கவர்ந்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக அறியப்படுபவர் சுசீந்திரன். இவர் இயக்கிய வென்னிலா கபடி குழு, நான் மகான் அல்ல, ஜீவா உள்ளிட்ட படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. இவரது இயக்கத்தில் கடந்த வருடம், கென்னடி க்ளப், சாம்பியன் உள்ளிட்ட படங்கள் வெளியாகின.
இந்நிலையில் சுசீந்திரன் தனது குடும்பத்தினருடன் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். தனது குடும்பத்தாருடன் சேர்ந்து, அவரது 10-வது திருமண நாளை அவர் கேக் வெட்டி கொண்டாடியிருக்கிறார். மனைவி மற்றும் மகன்களுடன் சேர்ந்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதையடுத்து அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.