இயற்கை, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடமை உள்ளிட்ட படங்களை இயக்கியவர் எஸ்.பி.ஜனநாதன்.
தற்போது விஜய் சேதுபதியை வைத்து லாபம் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். லாபம் படத்தின் எடிட்டிங் பணியில் இருந்தபோது இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருந்த எஸ்.பி.ஜனநாதனை விஜய் சேதுபதி மட்டும் பார்க்க அனுமதிக்கப்பட்டதாகவும், அவருக்கு மூளைக்கசிவு ஏற்பட்டதாகவும் பேசப்பட்டது. ஆனால் இயக்குநர் அமீர், எஸ்.பி.ஜனநாதனின் உடல்நிலை குறித்த முக்கியத் தகவலை வெளியிட்டிருந்தார். இதேபோல் முதல் நாள் இரவு தன்னைச் சந்தித்தபோது எஸ்பி ஜனநாதனுடனான உரையாடல் குறித்த உருக்கமான தகவலையும் களவாணி திருமுருகன் பதிவு செய்திருந்தார்.
ALSO READ: பிரபல இயக்குநர் SP ஜனநாதன் ICU-வில் அனுமதி.. நேரில் சென்ற விஜய் சேதுபதி.. என்ன நடந்தது?
இந்நிலையில் எஸ்.பி.ஜனநாதன் மறைந்தார் என்கிற தகவலை இயக்குநர் ஒருவர் வெளியிட்டுள்ளார். இயக்குநர் ஆறுமுகம், “எங்கள் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன், சார், கிரிட்டிக்கலான நிலையில் மற்றும் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார், இன்று காலை 10.07 மணிக்கு இருதயக் கோளாறால் காலமானார். அவரது ஆத்மா நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும்.” என்று தெரிவித்துள்ளார்.
Our director #SPJananathan, sir , who was in a critical condition and was undergoing treatment at the Apollo hospitals, passed away at 10.07 am today morning after suffering a cardiac arrest. May his soul rest in peace.
— Arumugakumar (@Aaru_Dir) March 14, 2021
இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் ஜெயம் ரவி நடித்த பூலோகம் திரைப்படத்துக்கு கதை எழுதியவர். பிரபல ரஷ்யன் எழுத்தாளர் தஸ்தோவ்ஸ்கியின் வெண்ணிற இரவுகள் நாவலின் பிரியர். அந்த கதையின் இன்ஸ்பிரேஷனில் இயற்கை படம் எடுத்தார். ஆனால் இயற்கை படக்கதை முற்றிலும் மாறுபட்டது.
இதேபோல், பேராண்மை படத்திலும் அந்த நாவல் குறித்து ஜெயம் ரவி ஒரு இடத்தில் பேசியிருப்பார். ஜனநாதன் கம்யூனிச கொள்கையில் ஈடுபாடுடையவர். ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம் நடித்த புறம்போக்கு என்கிற பொதுவுடமை படத்தில் அதை பிரதிபலித்திருப்பார். 61 வயதான எஸ்.பி.ஜனநாதனின் மறைவுக்கு திரையுலகம் அஞ்சலி செலுத்துகிறது.
எஸ்.பி.ஜனநாதனின் மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது நினைவுகளையும் இரங்கல்களையும் பதிவு செய்துவருகின்றனர்.
Can’t believe he is no more.. Really saddened by the news.. One of the nicest person I have ever met in my life. Will miss you deeply sir .. love you always #RIP pic.twitter.com/QKmTK5fuPq
— Arya (@arya_offl) March 14, 2021
நம்பிக்கையும்..
பிரார்த்தனைகளும்..
கை நழுவிச் சென்றாலும்
இயற்கை அன்னை
ஒரு போதும் கைவிடாது
உன்னைத் தழுவிக்
கொள்ளும்..
சென்று வா..
செந்நிறத் தோழனே.
பாரதிராஜா.
— Bharathiraja (@offBharathiraja) March 14, 2021
Love u sir pic.twitter.com/FTfNVsFZnT
— VijaySethupathi (@VijaySethuOffl) March 14, 2021