இயக்குனர் ஷங்கர் கேஜிஎப் 2 படம் பார்த்து படக்குழுவினரை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
Also Read| OFFICIAL: அமெரிக்க BOX OFFICE-ல் மாஸ் ஹிட்டடித்த 'டான்'.. இதுவரை எவ்வளவு வசூல் தெரியுமா? செம தகவல்
ரிலீஸ்…
ஹோம்பாலே பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் திரைப்படம் 'கே ஜி எஃப் சாப்டர் 2’. இந்த படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு (ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி) வெளியானது. இந்த படம் உலகம் 10,000 திரையரங்குகளில் ரிலீசானது. ரிலீஸானது முதல் இப்போது வரை வசூலில் சாதனைப் படைத்து வருகிறது. கன்னடம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியானது. வெளியான அனைத்து மொழிகளிலும் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற படமாக அமைந்தது.
வசூல் மன்னன் ராக்கி…
கேஜிஎப் 2 திரைப்படம் பாகுபலி 2 மற்றும் RRR படங்களைப் போலவே வசூலில் வெற்றிக்கொடி நாட்டியுள்ளது. வெளியானது முதலே அங்கு ரசிகர்கள் கூட்டம் படையெடுத்து படத்தைப் பார்த்து வருகின்றன. ரிலீஸாகி இன்று நான்காவது வாரத்தை எட்டியுள்ள நிலையிலிம் கணிசமான திரையரங்குகளில் ஓடிக் கொண்டு இருக்கிறது. இந்த திரைப்படம் உலகளவில் 1000 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதுபோலவே தமிழ்நாட்டிலும் 100 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.இதன் மூலம் ‘all time blockbuster’ படங்களில் ஒன்றாக இணைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. திரையரங்குகளில் வெற்றிகரமாக இன்னும் ஓடிக்கொண்டு இருக்கும் நிலையில் தற்போது அமேசான் ப்ரைம் வீடியோவில் Rental வடிவிலும் கேஜிஎஃப் 2 கிடைக்கிறது.
இயக்குனர் ஷங்கரின் பாராட்டு..
இந்நிலையில் முன்னணி இயக்குனரான ஷங்கர் தற்போது கேஜிஎஃப் 2 பார்த்துவிட்டு தன்னுடைய பாராட்டுகளைப் படக்குழுவுக்கு தெரிவித்துள்ளார். அதில் “கடைசியாக கேஜிஎஃப் 2 பார்த்துவிட்டேன். கட்டிங் எட்ஜ் பாணியிலான கதைசொல்லுதல், திரைக்கதை, எடிட்டிங். வசனங்கள் மற்றும் ஆக்ஷன் காட்சிகளுக்கு இடையிலான இண்டர்கட் தைரியமான முயற்சி. அது அழகாக பொருந்தியுள்ளது. ’பெரியப்பா’ அனுபவத்தைக் கொடுத்த இயக்குனர் பிரசாந்த் நீல் மற்றும் படக்குழுவினருக்கு என்னுடைய நன்றிகள்” எனக் கூறியுள்ளார்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8