தனது தனித்துவமான ஸ்டைலால் தனக்கென மாபெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளவர் இயக்குநர் செல்வராகவன். சமீபத்தில் தனுஷுடன் இணைந்து 'புதுப்பேட்டை 2' படம் குறித்து ரசிகர்களுக்கு செல்வராகவன் சர்ப்ரைஸ் தந்தார்.
இந்நிலையில் இயக்குர் செல்வராகவனின் மனைவியும் இயக்குநருமான கீதாஞ்சலி சமீபத்தில் கர்ப்பமாக இருப்பதை அறிவித்திருந்தார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து மகிழ்ச்சியான 21வது வாரம் என்று குறிப்பிட்டிருந்தார். உடன் தனுஷின் மனைவி ஐஸ்வர்யா R.தனுஷ் உடன் இருந்தார்.
இதனையடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர். இயக்குநர் செல்வராகவன் மற்றும் கீதாஞ்சலி இருவரும் கடந்த 2011 ஆம் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு லீலாவதி என்ற மகளும், ஓம் கார் என்ற மகனும் உள்ளது குறிப்பிடத்தக்கது.