“நானும் பெரிய ஆள்தான்..” “கடவுளிடம் விட்டுவிடுங்கள்..” இயக்குனர் செல்வராகவனின் திடீர் TWEET

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் செல்வராகவனின் ட்வீட் ஒன்று இப்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

Director selvaraghavan latest tweet got attention

Also Read | அடடே.. ‘மாமனிதன்’ படத்துல விஜய் சேதுபதியின் மகனா நடிச்சது இந்த இயக்குநரின் மகனா.?

இயக்குனர் செல்வராகவன்

தமிழின் முன்னணி இயக்குனரான செல்வராகவன்  ‘காதல் கொண்டேன்’, புதுப்பேட்டை மற்றும் ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தார். இதையடுத்து சமீபத்தில் அவர் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சாணிக் காயிதம் படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானார். ஆனால் அதற்கு முன்பாகவே அவர் நடித்த பீஸ்ட் திரைப்படம் வெளியாகியுள்ளது. நடிகராக பிஸியாக இருந்தாலும்  தனுஷுடன் நானே வருவேன் படத்தையும் செல்வராகவன் இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக இந்துஜா மற்றும் ஸ்வடீஷ் நடிகையான எல்லி அவ்ரம் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Director selvaraghavan latest tweet got attention

பகாசூரன்

பீஸ்ட், சாணிக்காயிதம் ஆகிய திரைப்படங்களுக்கு அடுத்து இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் வெளியாகின. சில நாட்களுக்கு முன்  அதிகாரப்பூர்வமாக இப் படத்துக்கு " பகாசூரன்" என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலு முடிந்துவிட்ட நிலையில் செப்டம்பர் மாதம் இந்த படம் ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது.

Director selvaraghavan latest tweet got attention

ட்வீட்

இந்நிலையில் தற்போது தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் “நம்மில் மிகப் பெரிய பிரச்சனை “ நானும் பெரிய ஆள்தான் “ என்று உலகத்திற்கு நிரூபிக்க போராடுவது! அந்த போராட்டத்தை கடவுளிடம் விட்டு விடுங்கள். அவர் ஒரு நாள் வெளிச்சம் போட்டு காட்டுவார். நாம் உள்ளது உள்ளபடியே வாழ்வோம்.” என பதிவு செய்துள்ளார். இந்த ட்வீட் தற்போது அவர் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

 

Also Read | சிவகார்த்திகேயன் - பவர் ஸ்டார் பவன் கல்யாண் திடீர் சந்திப்பு.. இதான் காரணமா? வைரல் ஃபோட்டோ!

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Director selvaraghavan latest tweet got attention

People looking for online information on Director selvaraghavan, Director selvaraghavan latest tweet, Selvaraghavan will find this news story useful.