www.garudavega.com

WOW! இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகவனா? இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அருண் மாதேஸ்வரன் இயக்கும் சாணிகாயிதம் படம்,  நடிகராக செல்வராகவனுக்கு அறிமுகப்படமாகும்.

Director Selvaraghavan Join hands with Director Mohan G

இந்த படம் 80 களின் பிற்பகுதியில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட கிரைம் டிராமாவாக உருவாகி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு நிறைவு அடைந்துள்ளது. செல்வராகவனுக்கு தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது படத்தின் பின் தயாரிப்பு பணிகள் நடந்து வருகிறது.

அதே வேளையில்  தனுசுடன் நானே வருவேன் படத்தையும் செல்வராகவன் இயக்க இருக்கிறார். இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக மகாமுனி படத்தில் நடித்த நடிகை இந்துஜா ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் வில்லனாக நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில், தயாரிப்பில் செல்வராகவன் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

Director Selvaraghavan Join hands with Director Mohan G

மோகன் ஜி ஏற்கனவே திரௌபதி, பழைய வண்ணாரப்பேட்டை, ருத்ர தாண்டவம் படங்களை இயக்கியவர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Director Selvaraghavan Join hands with Director Mohan G

People looking for online information on Mohan g, Selvaraghavan will find this news story useful.