www.garudavega.com

''ஷாக் ஆகிட்டேன்..'' - திருமணம் பற்றி வந்த அப்டேட்.. பிரபல இயக்குநர் அதிர்ச்சி. என்ன தெரியுமா..?!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல இயக்குநர் தனது திருமணம் பற்றி சமூக வலைதளத்தில் வந்த அப்டேட்டால் அதிர்ச்சி அடைந்துள்ளார். 

இயக்குநர் சீனு ராமசாமி அதிர்ச்சி பதிவு | Director Seenu Ramasamy shocked on his marriage post in facebook

தமிழ் சினிமாவில் தனது யதார்த்தமான திரைப்படங்களால் ரசிகர்களை கவர்ந்தவர் சீனு ராமசாமி. இவர் தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இவர் தற்போது விஜய் சேதுபதி நடிக்கும் மாமனிதன் திரைப்படத்தை இயக்கி வருகிறார். 

இயக்குநர் சீனு ராமசாமி அதிர்ச்சி பதிவு | Director Seenu Ramasamy shocked on his marriage post in facebook

இந்நிலையில் தற்போது சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். தனது ஃபேஸ்புக் பக்கத்தை அவர் அப்டேட் செய்த போது, அவருக்கு நேற்று திருமணம் ஆனதாக வந்துள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் சிலர், அவருக்கு திருமண வாழ்த்துக்களை சொல்ல, ''இது தவறான தகவல். எனக்கு 13 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்து எனது மனைவி மகள்களுடன் மகிழ்வாக வாழ்ந்து வருகிறேன்.அப்டேட் டவுன் லோடு செய்ததில்  ஏற்பட்ட பிழைக்கு வருந்துகிறோம்'' என பதிவிட்டுள்ளார். மேலும் ஃபேஸ்புக்கில் இப்படி வந்ததை பார்த்து, ''நானே ஷாக் ஆகிட்டேன்'' என நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார் அவர். 

 

மற்ற செய்திகள்

இயக்குநர் சீனு ராமசாமி அதிர்ச்சி பதிவு | Director Seenu Ramasamy shocked on his marriage post in facebook

People looking for online information on Seenu ramasamy, Seenu Ramasamy Marriage will find this news story useful.