தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஹெச். வினோத்.
Also Read | துணிவு, வாரிசு எந்த படம் முதல்ல பார்ப்பீங்க?.. காரணத்தோடு சட்டுன்னு பதில் சொன்ன G.P. முத்து!
சதுரங்க வேட்டை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான வினோத். அடுத்தடுத்து கார்த்தி நடிப்பில் தீரன் அதிகாரம் ஒன்று, அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். H.வினோத், அடுத்ததாக அஜித் நடிப்பில் துணிவு படத்தை இயக்கியுள்ளார்.
நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் கூட்டணி மூன்றாவது முறையாக இணையும் படம் 'துணிவு'.
வரும் 2023 பொங்கலுக்கு துணிவு படம் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
மேலும் இந்த படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை கலைஞர் தொலைக்காட்சி கைப்பற்றி உள்ளது. ஓடிடி ஒளிபரப்பு உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, கலை இயக்குனராக மிலன் பணிபுரிய, இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார். சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்.
இந்நிலையில் இயக்குனர் வினோத் குறித்து அவருடைய நண்பரும் இயக்குனருமான சரவணன் தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், "இயக்குநர் ஹெச்.வினோத்தை நேரில் சந்திக்கும் போதெல்லாம் சட்டென குற்ற உணர்வுக்கு ஆளானதைப் போல் தோன்றும். காரணம், உடைகள் விஷயத்தில் அவர் காட்டும் அநியாய அலட்சியம்... ஒரு நாள் வெளிப்படையாகக் கேட்டே விட்டேன்... “ஏன் பெரும்பாலும் போட்ட சட்டையே போடுறீங்க... காசு பணத்துக்கா குறைச்சல்?” அவர் சத்தம் போட்டுச் சிரித்தார்.
“ஒரு சட்டை பயன்படுத்த முடியாத அளவுக்குக் கிழியிற வரைக்கும் நான் அதைப் பயன்படுத்திட்டேதான் இருப்பேன். செருப்பு அறுந்து போகும் வரை யூஸ் பண்ணுவேன். அது என் பழக்கம், கஞ்சத்தனம் இல்ல. ஒரு சட்டையை, செருப்பை, காரை உற்பத்தி பண்ண எவ்வளவு மறைநீர் செலவாகுதுன்னு யூட்யூப்ல பார்த்தேன். பலர்கிட்ட விசாரிச்சா, மயக்கம் வராத குறை. இவ்வளவு தண்ணியை வீணடிச்சு உருவாகுற பொருளை நாம சரியா பயன்படுத்துறோமான்னு பார்த்தா, கிடையவே கிடையாது. இந்த ஆதங்கம் இருந்ததே தவிர, அதுக்காக ஒரு சின்ன நகர்வைக்கூட என்னால செய்ய முடியலை. அன்னிக்கு முடிவெடுத்தேன்... ஒரு பொருளை முழுவதுமா பயன்படுத்துறதுதான் இந்த மண்ணுக்கு நான் செய்யிற அதிகபட்ச பங்களிப்புன்னு... அதனாலதான் உடைகள் விஷயத்தில் நான் பெரிசா ஆர்வம் காட்டுறது இல்லை” என்றார் ஹெச்.வினோத்.
இதே கருத்தை இப்போது மீடியாக்களிடமும் வெளிப்படையாகச் சொல்லி வருகிறார் வினோத். கடந்த வாரம் சந்தித்தேன். சபரிமலைக்கு மாலை போட்டிருக்கிறார். ‘துணிவு’ குறித்து கேட்க அவ்வளவு ஆர்வம்... அவர் நான் சபரிமலை போய் வந்தது குறித்தே பேசிக்கொண்டு இருந்தார். சாமி சரணம் ஐயப்பா... #துணிவு தூள் கிளப்பட்டும் நண்பா..." என இயக்குனர் சரவணன் பதிவிட்டுள்ளார்.
Also Read | ஏன் உன் மகன் கருப்பா இருக்கான்?.. அனிதா அளித்த விளக்கம்.. "எவடி அவ.." பொங்கி எழுந்த VJ அர்ச்சனா!