நடிகர் E. ராமதாஸ் மறைவுக்கு இயக்குனர் சந்தான பாரதி நேரில் சென்று அஞ்சலி செலுத்தி உள்ளார்.
Also Read | சந்திரமுகி - 2 படத்தின் ஷூட்டிங்கில் இணையும் கங்கனா ரனாவத்.. எப்போ? எங்கே? BREAKING
விழுப்புரத்தைச் சேர்ந்த நடிகர் ராமதாஸ், ராஜா ராஜா தான், இராவணன், சுயம்வரம், ஆயிரம் பூக்கள் மலரட்டும், வாழ்க ஜனநாயகம், நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு போன்ற திரைப்படங்களை இயக்கியவர்.
ராமதாஸ், வசூல் ராஜா MBBS, காக்கிச் சட்டை, விசாரணை, அறம், விக்ரம் வேதா, மாரி 2, மெட்ரோ உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர்.
நடிகர் ராமதாஸ் மறைவுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர். மேலும் திரையுலகப் பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இயக்குனர் பேரரசு, மனோபாலா, மனோஜ் பாரதிராஜா, பாக்கியராஜ், சீனு ராமசாமி, வெற்றிமாறன், ரமேஷ் கண்ணா ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
இயக்குனர் சந்தான பாரதி, கே.கே. நகரில் உள்ள ராமதாஸ் இல்லத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அங்கு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய சந்தான பாரதி, "ரொம்ப வருத்தமான அதிர்ச்சியான செய்தி.
ராமதாஸ் 40 வருசமா பழக்கம். அவன் சினிமாவில் உதவி இயக்குனராக அறிமுகமான காலத்தில் இருந்து நம்ம வீட்ல தான் இருப்பான். அண்ணா அண்ணானு உயிரா இருப்பான். நல்ல எழுத்தாளன். போய் சேந்துட்டான்.
அவன் ஆன்மா சாந்தி அடையட்டும் " என சந்தான பாரதி கண்ணீர் மல்க பேசினார்.
Also REad | TFPC: தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தேர்தல் எப்போ?.. #BREAKING