விஜய்யின் மக்கள் இயக்கம் குறித்து அவரது அப்பாவும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் ரிலீஸுக்கு ரெடியாக உள்ளது. மேலும் இவர் மக்கள் இயக்கம் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது விஜய் மக்கள் இயக்கம் குறித்து இயக்குநரும் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் கருத்து தெரிவித்துள்ளார். விரைவில் பாஜகவில் அவர் இணையவுள்ளதாக வந்த தகவலுக்கு பதிலளித்த அவர், ''நான் பாஜகவில் இணையப்போகிறேனா என்ற கேள்விக்கே இடமில்லை. எனக்கென்று ஒரு அமைப்பு இருக்கிறது'' என பதிலளித்துள்ளார்.
மேலும் ''விஜய் மக்கள் இயக்கம் தேவைப்படும் போது அரசியல் கட்சியாக மாறும். மக்கள் அழைக்கும் போது சக்தி வாய்ந்ததாக இருக்கும்'' எனவும் அவர் தெரிவித்துள்ளார்.