நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்குகிறார் என தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனால் வரும் தேர்தலில் அவர் களமிறங்குகிறாரா? என்ற கேள்வி பல்வேறு தரப்பிலும் எழுந்தது. தளபதி விஜய் அரசியலில் இறங்க போகிறார் என அவரது ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் இதுகுறித்து விளக்கமறிய நமது தரப்பில் இருந்து தளபதி விஜய் அவர்களின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களை தொடர்பு கொண்டோம். அவரிடம் இந்த கேள்வியை முன்வைத்தபோது பதிலுக்கு எஸ்.ஏ.சந்திரசேகர், '' நாங்கள் கட்சிப்பெயரை பதிவு செய்தது உண்மை தான். 1993-ம் ஆண்டு தொடங்கப்பட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் அங்கீகாரத்திற்காக இதை செய்தோம்.
இதற்கு நாளையே நாங்கள் அரசியலுக்கு வரப்போகிறோம் என அர்த்தமல்ல,'' என்று தெரிவித்தார். இதனால் நடிகர் விஜய் அரசியலில் தற்போது களமிறங்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது.