திரைத்துறையில் திரைப் பிரபலங்களின் மரணம் ஒருபுறம் கலங்கவைத்து வந்தது போலவே, திரைத்துறை பிரபலங்களின் மிக நெருங்கிய உறவுகள் அடுத்தடுத்து மரணிக்கும் சம்பவங்களும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகின்றன.
அண்மையில் தான் இயக்குநர் ஷங்கரின் தாயார் காலமானார், இதேபோல் இயக்குநர் அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜா கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதனிடையே கங்கை அமரனின் மனைவி மணிமேகலை காலமாகியதை அடுத்து கங்கை அமரனின் மகன்கள் வெங்கர் பிரபு மற்றும் பிரேம்ஜி அமரன் உள்ளிட்டோர் கலங்கிப் போயினர்.
இதேபோல் நேற்ற்றைய தினம் இசையமைப்பாளர் டி.இமான் தனது தாயார் கோமா நிலையில் இருந்த சூழலில் உயிரிழந்ததாக ட்விட்டரில் அறிவித்து சோகமான பதிவினையும் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் தான் இயக்குநர் ராஜூ முருகன் குடும்பத்தில் மீண்டும் ஒரு அதிர்ச்சி தரக்கூடிய சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி உள்ளிட்ட திரைப் படங்களை இயக்கியவர் இயக்குநர் ராஜு முருகன். இவரது அண்ணன் குரு என்பவர் தான் தற்போது கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார். குக்கூ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ராஜு முருகன். இதையடுத்து ஜோக்கர், ஜிப்ஸி படங்களை ராஜூ முருகன் இயக்கினார். இவருடைய அண்ணன் குரு என்கிற குமரகுருபரன்.
இவர் பிரபல தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக பணியாற்றி வந்தார். நிறைய பிரபல ஊடகங்களில் புரோகிராம் புரொடியூசராக பணியாற்றி வந்த குமரகுருபரன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அண்மைக்காலமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து ராஜூ முருகன் மற்றும் குமரகுருபரன் குடும்பத்தினருக்கு திரை மற்றும் ஊடகத்துறையைச் சேர்ந்தவர்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
ALSO READ: "கண்கள் கண்ணீரில் .. அதுதான் கடைசினு இருவருக்குமே தெரியாது!" - சோகத்தில் டி.இமான்!