www.garudavega.com

'காதல்' பட கேரக்டர்கள் பெயரில் ஆணவக்கொலையை மையமாக வைத்து உருவாகும் “ஐஸ்வர்யா முருகன்”!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் காதல். இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் பாலாஜி சக்திவேல் இப்படத்தை இயக்கினார். பரத், சந்தியா, தண்டபானி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்த இந்த திரைப்படம் தமிழகமெங்கும் Surprise Blockbuster Hit அடித்தது. ஐஸ்வர்யா - முருகன் எனும் கதாபாத்திரத்தில் சந்தியா - பரத் நடித்தனர். இந்த கேரக்டர்கள் பெயரில் ஆணவக்கொலையை மையமாக வைத்து உருவாகும் “ஐஸ்வர்யா முருகன்” படம் குறித்து டைரக்டர் ஆர்.பன்னீர்செல்வம் சில கருத்துக்களை கூறியுள்ளார்.

Director Panneer Selvam about His Aishwarya Murugan Movie

அதில், 'கருப்பன்' படத்திற்கு பிறகு, முந்தைய படங்களின் சாயல் இல்லாமல் ஒரு கதை பண்ணலாம் என்று யோசிக்கும் போதுதான்.. ரொம்ப நாள் என் மனதில் உருவாக்கி வைத்திருந்த இந்த ஆணவக் கொலை “ஐஸ்வர்யா முருகன்” கதையை உருவாக்கினேன். அதன் பின்னணியில் படம் பண்ண நினைத்த போது நிறைய தகவல்கள் கிடைத்தது. மனதை கல்லாக்கிக்க வேண்டியது இருந்தது. அப்படிப்பட்ட நிஜங்களின் பிம்பம் தான் இது.

Director Panneer Selvam about His Aishwarya Murugan Movie

காதலையும்,வலியையும், பிரிவையும் பல படங்களில் சொல்லிட்டாங்க.ஆனால் இங்கே ஒரு காதல், காதலர்களின் குடும்பங்களைச் எப்படி சிதைத்து .. துயரங்களை உண்டாக்கியது என்ன..  இப்படி பல நிஜங்களை சொல்ற படம் தான் “ஐஸ்வர்யா முருகன்”.  வாழ்க்கை உங்களை எந்த எல்லைக்கும் கூட   கொண்டுப் போக வைக்கும்” என்றார் டைரக்டர் ஆர்.பன்னீர்செல்வம்.

Director Panneer Selvam about His Aishwarya Murugan Movie

ஹீரோவாக அருண் பன்னீர்செல்வம் அறிமுகமாகிறார். பக்கத்து வீட்டு பையன் மாதிரி கதைக்கு அருமையாக பொருந்தியுள்ளார். கேரளாவைச் சேர்ந்த வித்யாபிள்ளை ஹீரோயினாக அறிமுகமாகிறார். மேலும் தெய்வேந்திரன், ஹர்ஷ் லல்வானி, சாய்சங்கீத்,குண்டுகார்த்திக், தீனா, ராஜா, சங்கீதா,, நாகேந்திரன்னு புதுமுகங்கள் ஆக்கிரமிப்பில் படம் உருவாகியுள்ளது.

Director Panneer Selvam about His Aishwarya Murugan Movie

ஏகன் பட ஒளிப்பதிவாளரும் பி.சி ஸ்ரீராமின் உதவியாளரான அர்ஜுன் ஜெனா கேமிராமேனாக பணிபுரிகிறார். ‘ரேணிகுண்டா’ விற்கு இசை அமைத்த கணேஷ் ராகவேந்திரா  இதற்கு இசை அமைக்கிறார். எடிட்டிங் ஆண்டனியின் உதவியாளரான ஜான் ஆபிரகாம். கலை - முகமது.சண்டைப்பயிற்சி -தினேஷ். இவர் சண்டை இயக்குநர் ராஜசேகரின் உதவியாளர்.  நடனம் - தஸ்தா. பாடல்கள்:யுகபாரதி. pro ஜான்சன். தயாரிப்பு மேற்பார்வை:ஜே.சம்பத்குமார். தயாரிப்பு: ஜி.ஆர்.வெங்கடேஷ், கே.வினோத். கம்பெனி: மாஸ்டர் பீஸ்.

மற்ற செய்திகள்

Director Panneer Selvam about His Aishwarya Murugan Movie

People looking for online information on Aishwarya Murugan, ஐஸ்வர்யா முருகன், காதல், Kaadhal will find this news story useful.