மாமன்னன் படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.
Also Read | "Cutting Plier பாத்தாலே இவர் ஞாபகம் தான்.." விக்ரம் படத்தில் மாஸ் காட்டிய ஜாபர் சாதிக்.. Exclusive
மாமன்னன்…
மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய இரண்டு படங்களும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றியடைந்தன. அதையடுத்து இப்போது அவர் உதயநிதி ஸ்டாலினை வைத்து மாமன்னன் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெய்ண்ட்ஸ் மூவிஸ் நிறுவனமே தயாரிக்கிறது. இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன், பஹத் பாசில், வடிவேலு மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். ஏ ஆர் ரஹ்மான் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். போஸ்டரில் வடிவேலுவுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர் பெயரை முதலில் இடம்பெறச் செய்திருந்தனர் படக்குழுவினர்.
விறுவிறுப்பாக நடக்கும் படப்பிடிப்பு…
இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்காட்டில் மார்ச்-4 ல் துவங்கி ஏப்ரல் மாதத்தில் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது. இந்த மாமன்னன் படத்தில் வடிவேலு அரசியல்வாதியாக நடிக்க இருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரப் பெயரும் மாமன்னன் என கூறப்படுகிறது. நடிகர் வடிவேலு, சிறிது இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்திலும் தற்போது நடித்து வருகிறார்.
மாமன்னன் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு, மார்ச் மாதம், ஏற்காட்டில் நடைபெற்று நிறைவடைந்தது. இதற்கு அடுத்தபடியாக, சேலம் பகுதியிலும் படப்பிடிப்பு நிகழ்ந்ததாக தகவல்கள் வெளியானது. மேலும், இந்த மாமன்னன் படத்தில் வடிவேலு அரசியல்வாதியாக நடிக்க இருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரப் பெயரும் மாமன்னன் என கூறப்படுகிறது.
மாமன்னன் குழுவோடு இயக்குனர் மிஷ்கின்…
இந்நிலையில், மாமன்னன் படத்தின் படப்பிடிப்பில், நடிகர் பஹத் பாசில் கலந்து கொண்டு தற்போது நடித்து வருகிறார். இது சமம்ந்தமான புகைப்படங்களில் பகத் வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை என அரசியல்வாதி தோற்றத்தில் காணப்படுகிறார். இந்நிலையில் தற்போது இயக்குனர் மிஷ்கின் மாமன்னன் பட செட்டுக்கு சென்று அங்கு இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் பகத் ஃபாசில் ஆகியோரை சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன. இந்த சந்திப்பில் எழுத்தாளர் மற்றும் நடிகரான பவா செல்லதுரையும் உடன் இருக்கிறார். இந்த புகைப்படங்களிலும் பகத், வெள்ளை வேட்டி வெள்ளை சட்டையில் அரசியல்வாதி தோற்றத்திலேயே காணப்படுகிறார். அதனால் அவரும் அரசியல்வாதியாக நடிக்கிறாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
Also Read | "கண்டிப்பா வரணும்.." முதல்வருக்கு திருமண Invitation கொடுத்த விக்னேஷ், நயன்.. வைரலாகும் ஃபோட்டோ