பேரரசர் ராஜராஜ சோழன் குறித்து இயக்குனர் மோகன் ஜி பேசியுள்ளார்.
பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் போன்ற போன்ற படங்களின் இயக்குனர் மோகன்.G, அடுத்ததாக ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம் "பகாசூரன்" படத்தை இயக்கி முடித்துள்ளார்.
இந்த படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்கிறார். நட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படம் நவம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்த இயக்குனர் மோகன் ஜி, ராஜ ராஜ சோழன் & பொன்னியின் செல்வன் படம் குறித்து பேசியுள்ளார்.
இயக்குனர் மோகன் ஜி பேசியது, "தமிழக மக்களுக்கு வரலாறு குறித்து பெரிய ஆர்வம் முன்னர் இருந்ததில்லை. தற்போது 'பொன்னியின் செல்வன்' படம் வந்த பிறகு சோழர்கள், சேரர்கள், பாண்டியர்கள் குறித்து அறிந்துகொள்ள தமிழ் மக்களுக்கு ஆர்வம் ஏற்பட்டுள்ளது. வீராணம் கோயில்களுக்கு தற்போது மக்கள் செல்கின்றனர்.
இது சிலருக்கு பயத்தை உருவாக்கியுள்ளது. வரலாறு மூலம் புரிதல் வந்தால் பிரிந்திருக்கும் மக்கள் ஒன்று சேர்ந்துவிடுவார்கள் என்ற அச்சம் சிலருக்கு ஏற்பட்டிருக்கிறது.
'திரௌபதி’ வெற்றி பெற்ற பிறகு இடதுசாரி, வலதுசாரி & நடுநிலை படங்கள் வர தொடங்கி உள்ளன. இந்து மதம் இல்லை என்று யாராலும் சொல்லிவிட முடியாது. ராஜராஜ சோழனை ஒரு மதமாக சுருக்கிப் பார்க்க முடியாது. அவரை வெறும் சைவர் என கூறினால், அதற்கு ஆதாரத்தை கொடுக்க வேண்டும். சங்க காலத்திலேயே இந்து என்ற பெயர் உள்ளது.” என மோகன் ஜி பேசியுள்ளார்.