பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளவர் இயக்குனர் மோகன் ஜி. இவரது இயக்கத்தில் தற்போது வெளியாகி உள்ள திரைப்படம் 'பகாசூரன்'. இந்த திரைப்படத்தில் செல்வராகவன், நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | தங்கலான் படப்பிடிப்பில் இருந்து சீயான் விக்ரம்.. "லுக்கு சும்மா தெறியா இருக்கே"...
ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் "பகாசூரன்" படத்தை தயாரித்துள்ளது. இயக்குனர் செல்வராகவன், நட்டி ஆகியோருடன் ராதாரவி, K.ராஜன், தாராக்ஷி, ராம்ஸ், சரவண சுப்பையா, தேவதர்ஷினி, சசி லையா, ஆகியோர் நடித்துள்ளனர். சாம் C.S. இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு இயக்குனர் மோகன் ஜி, அவரது மனைவி ஆகியோர் பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளனர். இதில், அவர்களின் மகளும் உடன் இருந்தார். இந்த பேட்டியில் கணவர் இயக்கும் திரைப்படங்கள் குறித்து மோகன் ஜி மனைவியும் நிறைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். மேலும் தனது இயக்குனர் பயணம் பற்றியும் மோகன் ஜி நிறைய விஷயங்களை பேசி இருந்தார்.
அதே போல நடிகர் அஜித்துடன் திரைப்படங்கள் பணிபுரிவது குறித்து கேள்வியும் மோகன் ஜியிடம் எழுப்பப்பட்டிருந்தது. அவரது வீட்டில் நடிகர் அஜித்குமாருடன் மோகன் ஜி இருக்கும் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தது.
அது மட்டுமில்லாமல், நடிகர் அஜித்குமாரின் மச்சானான ரிச்சர்ட்டை வைத்து மோகன் ஜி திரைப்படங்கள் இயக்கி உள்ளார். அப்படி இருக்கையில், அஜித்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் குறித்தும், அஜித்தை இயக்குவது குறித்த கேள்விக்கும் பதில் அளித்த மோகன் ஜி, "பழைய வண்ணாரப்பேட்டை படம் முடிஞ்சு வந்த கேப்ல ரிச்சர்ட் சாரோட ஃபேமிலி ஃபங்சன் ஒன்னு நான் அட்டென்ட் பண்ண போயிருந்தேன். அப்ப அஜித் சார் கூட எடுத்த ஃபோட்டோ தான் இது. அப்ப என்ன டைரக்டர்ன்னு சொல்லி அஜித் சார் கிட்ட அறிமுகப்படுத்தி வச்சாரு. சார் வந்து நல்லா படங்களெல்லாம் பண்ணி நல்லா வரணும்ன்னு சொல்லி தோள்ல தட்டி வாழ்த்துனாரு.
அஜித் சாருக்கு கதை இருக்கு. பகாசூரன், அதுக்கப்புறம் இன்னொரு படம் எல்லாம் பண்ணி நான் Success ஆகும் போது அவரை Handle பண்ணுவேன்னு ஆட்டோமெட்டிக்கா சொசைட்டிக்கு புரியும். சினிமா சர்க்கிள்க்கு இவன் இதை தாங்குவான்னு தெரியுறப்ப அது நம்மளை தேடி வரும்" என மோகன் ஜி கூறினார்.
Also Read | "பெண்கள் அடங்கி இருக்கனும்ன்னு படம் எடுக்குறாரா?".. மோகன் ஜி மனைவியின் பதில்!!. Exclusive!!